அகில இந்திய அளவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ துறையில் சேருவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு (நீட்) இன்று மே 5-ந் தேதி நடைபெற உள்ளது. அயல்நாடுகள் உள்ளிட்ட நாடு முழுவதும் 557 நகரங்களில் 24 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகிறார்கள்.
இந்தாண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 7, 042 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு 12 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வேலூர் சாய்நாதபுரம் வி. வி. என். கே. எம். சீனியர் செகண்டரி பள்ளி, டி. கே. எம். மகளிர் கலைக்கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி, திருமலைக்கோடி ஸ்பார்க் சீனியர் செகண்டரி பள்ளி, சன்பீம் மெட்ரிக்பள்ளி, சிருஷ்டி மெட்ரிக்பள்ளி, சிருஷ்டி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி, வி. ஐ. டி. பல்கலைக்கழகம், சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி சி. பி. எஸ். இ. பள்ளி, வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி, ராணிப்பேட்டை டி. ஏ. வி. பெல் பள்ளி, சோளிங்கர் வித்யாபீடம் சீனியர் செகண்டரிபள்ளி ஆகிய பள்ளிகளில் தேர்வு நடைபெறுகிறது
தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வு மையத்துக்குள் காலை 11 மணி முதல் தேர்வர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். பிற்பகல் 1. 30 மணிக்குள் மாணவர்கள் மையத்துக்குள் வர வேண்டும்.
சோளிங்கர் வித்யாபீடம் சீனியர் செகண்டரி பள்ளியில் நீட் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் 480 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இன்று காலை முதலே மாணவர்கள் பள்ளிக்கு வரத்தொடங்கி விட்டனர். கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளததால் தேர்வர்களை முழுமையாக சோதனை செய்து தேர்வறைக்கு அனுப்பி வைத்தனர்
மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் தேர்வு எழுத வரும் மாணவர்களை அரசுப்பேருந்தில் பள்ளி வளாகத்தில் இறக்கி விட்டு சென்றனர்.
மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில். பள்ளிப் பேருந்துகள் மாணவர்களை பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளிக்கு இலவசமாக அழைத்து வந்தனர்.
தேர்வு பாதுகாப்புப் பணிக்காக முப்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்