Close
அக்டோபர் 5, 2024 7:05 மணி

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதி ஏற்பு

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியம் அரவம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு தினம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரவம்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா தலைமை வகித்தார்.
இதில் ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி வாசித்தார் .  இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முத்துக்குமார் உலக புகையிலை எதிர்ப்பு தினம் குறித்து பேசியதாவது:

உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்பது 1987 முதல் உலக சுகாதார அமைப்பால் மே 31 அன்று அனுசரிக்கப்படும் ஒரு குறிப்பிடத்தக்க வருடாந்திர நிகழ்வாகும். இதன் நோக்கம் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், புகைபிடிப்பதை விட்டுவிட மக்களை ஊக்குவிப்பதும் ஆகும்.

புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இதனுடைய முக்கிய நோக்கம் ஆகும் எனவேதான் நாம் மக்களிடம் புகையிலையின் பாதிப்புகளை உணர்ந்து நாம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து புகையிலை முற்றாக விலக்கி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொல்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. மேலும் புகையை சுவாசிப்பதினால் மட்டும் ஆண்டுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, இதய நோய், புற்றுநோய், நுரையீரல் சார்ந்த நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பல உடல்நலப் பிரச்னைகளுக்கு புகையிலை முக்கிய காரணமாகும்.

எனவே நாம் நாம் வசிக்கும் பகுதிகளிலும் நம் அருகில் இருப்பவரிடமும் இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் புகையிலை பயன்படுத்தாத ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் அதற்கு நாம் உலகத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக புவனேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.இந்நிகழ்வில் அறிவியல் இயக்க கிளை நிர்வாகிகள் வைஷ்ணவி, திவாகர், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிறைவாக அனைவருக்கும் அறிவியல் இயக்க கிளை செயலாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top