Close
ஏப்ரல் 1, 2025 1:03 காலை

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ  பள்ளி மாணவி உலக சாதனை..!

சிவகங்கை

வேதியியலில் தனிமங்களின் பெயர்களை மிகவும் வேகமாகக்கூறி உலக சாதனை படைத்த சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரிப் பள்ளியில் 11 -ஆம் வகுப்பு மாணவி ராகவி.

சிவகங்கை: வேதியியலில் தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை மிகவும் வேகமாக 35 விநாடி 08 மில்லி விநாடிக்குள் கூறி சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரிப் பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவி ராகவி உலக சாதனை நிகழ்த்தினார்.

இது குறித்து அப்பள்ளியின் கல்வித் திட்ட இயக்குநரும், இளம் விஞ்ஞானியுமான டாக்டர் சுப்ரஜா கூறுகையில்:

இந்த உலக சாதனை  நிகழ்வானது 18 வயதினர் பிரிவில் 47 விநாடிகள் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற சாதனை சிவகங்கை, மதுரை போன்ற மாவட்டங்களில் இதுவே முதன் முறை என்பதும் கூடுதல் சிறப்பாகும். எங்கள் பள்ளியில் இதுபோன்று மாணவர்களின் தனித் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது தாரக மந்திரம் ஆகும். மேலும் இந்த மாணவியின் சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் மேலும் மாணவி ராகவிக்கு 20 விநாடிக்குள் முடிப்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சாதனை நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த பள்ளி நிர்வாகத்தினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சிவகங்கை
சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகிகள்

சாதனை நிகழ்த்திய மாணவிக்கு பள்ளித் தலைவர் டாக்டர்.பால.கார்த்திகேயன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நிகழ்வில் பள்ளியின் கலைத்திட்ட இயக்குநர் கங்கா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் பாலமுருகன், மேலாளர் தியாகராஜன், வேதியியல் ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ராகவியின் தாயார் மேகலா ஆகியோர்கள் உடனிருந்தனர்.

வேதியியலில் தனிமங்களின் பெயர்களை மிகவும் வேகமாகக்கூறி உலக சாதனை படைத்த  சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரிப் பள்ளியில் 11 -ஆம்  வகுப்பு மாணவி ராகவி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top