Close
ஏப்ரல் 21, 2025 2:38 காலை

மேலப்பட்டி  இல்லம் தேடிகல்வி மையத்துக்கு பாராட்டு

புதுக்கோட்டை

பட விளக்கம்-  பரிசு வென்ற   புதுக்கோட்டை  அருகே  மேலப்பட்டி இல்லம் தேடிக் கல்வி – தன்னார்வலர்கள்.  

 புதுக்கோட்டை: இல்லம் தேடிக் கல்வி – தன்னார் வலர்களுக்கான பரிசளிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில்   நம்ம ஊரு நம்ம கதை என்ற தலைப்பில் இல்லம் தேடி தன்னார்வலருக் கான கதை எழுதும் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் சுமார் 350 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைத்தனர்.

இதில் சிறந்த கதையாக மேலப்பட்டி  இல்லம் தேடி கல்வி மைய  தன்னார்வலர் நதியா எழுதிய சாதிக்கத் துடிக்கும் மாணவன் என்ற தலைப்பு சிறப்பான கதையாக தேர்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை
கல்வி

தன்னார்வலர் நதியா மற்றும் அவரது குழுவில் இருக்கும் 20 மாணவச் செல்வங்களுக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுதந்திரன்,  இல்லம் தேடிக் கல்வியின்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரிசுத்தம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கள் சரவணன், வீரப்பன், புதுக்கோட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் டயானா, ஆசிரியர் பயிற்றுநர்கள்  பாலமுருகன், ராதிகா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் களுக்கு சான்றிதழும், கேடயமும்  வழங்கினர்.

புதுக்கோட்டை

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீதாலெட்சுமி, ஆசிரியர்கள் மகேஸ்வரன், சரவணன் ஜெயந்தி, இந்திரா, ஜெயலெட்சுமி , கற்பகவல்லி மற்றும் தன்னார்வலர் ரெஜினா ஆகியோர்  பங்கேற்றனர். ஆசிரியர் மகேஸ்வரன்  நன்றி கூறினார்.  மாநில மையத்தின் வழிகாட்டு தலின்படி மாணவர்க ளுடைய கற்றல் திறனை மேம்படுத்தக் கூடிய வகையில் கொரோனா காலத்தில் தமிழக முதல்வரால் துவங்கப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் வாயிலாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top