Close
செப்டம்பர் 19, 2024 11:04 மணி

புதுக்கோட்டையில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக் கிழமை (08.04.2022)   நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வித் தரத்துடன் உடல்நலம் சார்ந்த பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களின் உயரம், எடையை கணக்கிட்டு எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும்.

மாணவர்களின் பொற்றோர்களிடத்தில் மாணவர்களின் உயரம், எடை குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால் தெரியப்படுத்த வேண்டும். பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து, மீண்டும் பள்ளி சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் பள்ளி செல்லாத குழந்தைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.

எமிஸ் இணையதளத்தில் தொடர்ந்து மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்வதை தலைமையாசிரி யர்கள் உறுதி செய்ய வேண்டும்.  விளையாட்டு பாட வேலை களில் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களை அனுமதிக்கக்கூடாது. உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு விளையாட அனுமதிக்க வேண்டும்.

பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து ஆண்டு முடிவில் முறையான பள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காது, கண் முழுமையாக குறைபாடுடைய குழந்தைகளை அரசு பார்வையற்றோர் பள்ளி மற்றும் காதுகேளாதோர் பள்ளியில் சேர்த்திட வேண்டும்.

நூலகப் புத்தகங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யும் பணியை தலைமையாசிரியர்கள் விரைந்து முடித்திட வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 % இலவச மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்திட வேண்டும்.

இல்லம் தேடிக் கல்வித் திட்ட மையங்களை அதிகப்படுத்திட வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  மாணவர்கள் காலணி அணிந்து வரும் படி ஆசிரியர்கள் வழியுறுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுகொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் வாகனத்திற்கு ஓட்டுநர் தேர்வு செய்யும் பொழுது அவர்களது உடற்தகுதியினை உறுதி செய்ய வேண்டும். வகுப்பறை கட்டடங்கள் கூடுதலாக தேவைப்படும் பள்ளிகள் குடிநீர், கழிவறை போக்குவரத்து போன்ற வசதிகள் தேவைப் படும் பள்ளிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து நடவடிக் கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்  தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, துணைக் காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) பஷினாபீவி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மஞ்சுளா, இராஜாராமன், மணிமொழி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட அலுவலர் தங்கமணி, மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top