திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் சிஎஸ்ஐ செவிலியர் பள்ளி இணைந்து உலக உடல் நல தின விழிப்புணர்வு பேரணி சிஎஸ்ஐ செவிலியர் பள்ளியிலிருந்து நடத்தப்பட்டது,
சிறப்பு விருந்தினராக டாக்டர் அருண் இம்மானுவேல் பங்கேற்று கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது:
உலக சுகாதார நிறுவனம் (WHO) நிறுவப்பட்ட ஏப்ரல் 7-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் WORLD HEALTH DAY உலக உடல் நல நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தினை உலக சுகாதார நிறுவனம் வெளியிடுகிறது. இவ்வாண்டு நமது பூமி நமது நலம் (Our Plant – Our Health) என அறிவித்துள்ளது. இதன் மூலம் நாம் நலமாக வாழ நமது பூமியும் சரியாக நலமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் உணர வேண்டும்.
எனவே சுற்றுச் சூழலை மாசுபடுத்துதை நாம் தவிர்க்க வேண்டும். மேலும் உடனுக்கு கேடுவிளைவிக்காத உணவு வகைகளை அளவோடு உண்ணுதல் தேவையான உடல்பயிற்சிகளை நடைப்பயிற்சி, யோகா, மூச்சுப் பயிற்சி தவறாது செய்தல், புகை, மது மற்றும் போதைப் பொருட்களை தவிர்த்தல், நல்ல சிந்தனைகள் மற்றும் செயல்கள் செய்தல், மனநலம் காத்தல், சரியான வாழ்க்கை முறையை கடைப் பிடித்தல் என உடல் நலம் பேணும் நடவடிக்கைகளை கவனமாக, தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
நமதுஉடலையும், நமது பூமியையும்கெடுக்காமல் பாதுகாப் போம். நலமாக வாழ்வோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் உடல் நோயின்றி நலமாகஇருந்தால்தான் நாம் அமைதியாக மகிழ்ச்சியாக வாழமுடியும் என்றார்.
சிஎஸ்ஐ செவிலியர் பள்ளி முதல்வர் சுகந்தி வாழ்த்துரை வழங்கினார். ஆசிரிய ஆலோசகர் பியூலா நேசப்ரியா வழிகாட்டுதலின்படி, லெ.நா.அலங்காரம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.