ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில்மாணவர் களின் படைப்பாற்றல் கண்காட்சி 23.04.2022 நடைபெற்றது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் திறன் வெளிப்படுத்தும் படைப்பாற்றல் கண்காட்சி நடைபெற்றது. பொதுவாக நடத்தப்படுகிற கண்காட்சிகளில் அறிவியல் செய்முறைகள் மட்டுமே காட்சிப்படுத்தப்படும்.
அறிவியல் மட்டுமல்லாது தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், கணிணியியல் என அனைத்துப் பாடத்திற்குமான அறிவினை செய்முறையினை மாணவர்கள் வெளிப்படுத்திட வேண்டும் என்று பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி ஏற்பாடு செய்திருந்த மாணவர்களின் கண்காட்சியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி. சத்தியமூர்த்தி துவங்கி வைத்து பேசுகையில்,
மாணவர்களின் திறமைகள் நம்மை வியக்க வைக்கின்றன. மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை விளக்கும் விதமும், மொழி ஆளுமையாகவும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. படைப்பாhற்றல் திறமைகளைப் பாராட்டுவதோடு மாணவர்கள் கட்டிக் காக்கும் ஒழுக்கத்தையும் மனதாரப் பாராட்டுகிறேன். பள்ளி நிர்வாகத்துக்கும் ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள் பாராட்டுகளும் உரித்தாகட்டும் என்று குறிப்பிட்டார்..
பாடவாரியாக வகுப்பறைகள் ஒதுக்கபட்டு மாணவர்கள் செய்முறைகளை காட்சிப்படுத்தி விளக்கமளித்தனர்.ஏழு அதிசயங்களில் சீனப்பெருஞ்சுவர் தாஜ்மகால் மற்றும் வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை மற்றும் ஏராளமான செய்முறைகள் இடம் பெற்றன.
கண்காட்சியில் அனைவருடைய பார்வையையும் கவர்ந்தசெங்கோட்டையைஉருவாக்கியமாணவன் ராகவ்-க்கு நினைவு ப்பரிசு வழங்கப் பட்டது. மழலையர் வகுப்புகளில் மாணவர் கள் சமூக கடமையாற்றுகின்ற மருத்துவர்கள், காவலர்கள், இராணுவ வீரர்கள் உடையணிந்து வந்திருந்த தங்கள் கடமைகளை மழலை மொழியில் விளக்கியது காண்போரைக் கவர்ந்தது.
கண்காட்சியில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த புதுகை நகருக்கு பெருமை சேர்க்கும் “மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் செல்பி பாயிண்டில்” பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கண்காட்சியினை, பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், மேலாண்மை இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, முதன்மைசெயல் அலுவலர் (சிஇஓ) காவியா மூர்த்தி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார்.
பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் துரைமணி, ரோட்டரி துணை ஆளுநர் கருணாகரன், பேராசிரியர்கள் அய்யாவு, கருப்பையா, கவிஞர் பீர்முகமது, மகாத்மா ரவிச்சந்திரன், பார்வதி ஜுவல்லர்ஸ் முருகராஜ், யோகா பாண்டியன், கராத்தே கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர்கள்; வெங்கடேஸ்வரன், பவானி தலைமையிலான ஆசிரியர் குழு செய்திருந்தது. விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, ஐஸ்வர்யா மற்றும் ஆசிரியப்பெருமக்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர். பெருந்தொற்றுக் காலத்துக்கு பிறகு நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் பெற்றோர்கள் பெரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளின் திறமைகளை, ஆற்றல்களைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.