Close
செப்டம்பர் 20, 2024 8:35 காலை

இல்லம்தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கல்

புதுக்கோட்டை

இல்லம்தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது

புல்வயல் அரசு தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம்,  அன்னவாசல் ஒன்றியம், புல்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் மீனாட்சி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி தன்னார்வலர்களுக்கு தன்னார்வலர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கி பேசியதாவது:
கொரோனா பெருந்தொற்றுப் பொது முடக்க காலங்களில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி, இழப்புகளைக் குறைத்திடும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  ஆலோசனையின் படியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி  வழிகாட்டுதலின் படியும் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பள்ளி நேரங்களைத் தவிர பள்ளி வளாகங்களுக்கு வெளியே மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் அடிப்படையில் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்க வேண்டும் .

மாணவர்கள் பள்ளிச் சூழலின் கீழ் ஏற்கெனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை இல்லம் தேடி கல்வித் திட்ட செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்த வேண்டும்.மாணவர்களுக்கு தினசரி குறைந்த பட்சம் 1முதல் 1 1/2 மணி நேரம் கற்றல் வாய்ப்பை வழங்கி அவர்களை அன்றாட கற்றல் செயல்படுகளில் எளிய முறையில் படிப்படி யாக பங்கேற்கச் செய்தல் வேண்டும் என்பதே இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் இணைப்புப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் சென்று புத்தகப் பூங்கொத்து நூல்கள், அறிவியல் உபகரணங்கள் ,கணித உபகரணங் கள்,மொழிக்கற்றலுக்கான உபகரணங்கள் ஆகியவற்றை பெற்று கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கற்றல் கற்பித்தல் பணி உயிரோட்டமாக இருக்க வேண்டும் எனில் தன்னார்வலர்கள் தாங்களே கற்பித்தல் துணைக்கருவிகளை தயாரித்து பாடம் நடத்த வேண்டும்.

மாணவர்களிடம் உள்ள தனித்திறனை வெளிப்படுத்தவும் வளர்த்தெடுக்கவும் உதவும் வகையில் மையங்களில் மாதம் இருமுறை தனித்திறன் கொண்டாட்டம் நடத்த வேண்டும். அறிவியல் மனப்பான்மை பெறவும் அறிவியல் அறிவை வெளிப்படுத்தவும் இருமாதங்களுக்கு ஒரு கொண்டாட்டம் நடத்த வேண்டும் என்றார்.

முன்னதாக புல்வயல் பள்ளி குடியிருப்பைச் சேர்ந்த இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஜெயப்பிரியா, சுபாஷினி, மலர், மதன்மித்ரா, தனபாக்கியம் , சண்டப்பட்டி தன்னார் வலர்கள் சாந்தி,ராஜேஸ்வரி, கொல்லம்பட்டி தன்னார்வலர் லாவண்யா ஆகியோருக்கு இல்லம் தேடி கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி , பள்ளித்தலைமை யாசிரியர் மீனாட்சி ஆகியோர் கற்றல் கற்பித்தலுக்கான துணைக்கருவிகள்,எழுது பொருள்களை வழங்கினர்.

நிகழ்வின் போது புல்வயல் பள்ளி ஆசிரியர்கள் பாலாமணி, கலைவாணி,சரஸ்வதி ஆகியோர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top