Close
மே 20, 2024 6:13 மணி

கோவிட்-19 தொற்று: அரசின் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி

கோவிட் -19 பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிக ளிலும் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றிட வேண்டும் என  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி   அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து  அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர் களுக்கும்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி அனுப்பியுள்ள  சுற்றறிக்கை: பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வருகை தர வேண்டும்.

9 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத் திக் கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும் .மாணவர்கள் மூலம் அவர்களது பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத் த வேண்டும்.

மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை தெர்மல் ஸ்கேனர் கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.கிருமி நாசினிகள் தெளிக்கப்பட வேண்டும்.சோப்பு கலந்த தண்ணீர் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கு வைக்கப்பட வேண்டும்.

பள்ளிகளில் ஆக்‌ஸிஜன் அளவு கண்டறியும் கருவி இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.வகுப்பறையில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதையும் சமூக இடைவெளியை பின்பற்றி இருப்பதையும் ஆசிரியர்கள் உறுதி படுத்த வேண்டும்.

அரசுப் பொதுத் தேர்வுகள் தொடங்கியிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு ஏற்படும் உடல்உபாதைகளுக்கு முதலுதவி செய்ய அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளின் தொலைபேசி எண்கள் பள்ளியில் பராமரிக்கப்பட வேண்டும்.

கழிவறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு நேர்த்தியாக பராமரிக்கப்பட வேண்டும்.அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளித் தலைமையாசிரியர்கள் பள்ளி சுற்றுப்புற வளாகத்தை சுத்த மாகவும் ,நேர்த்தியாகவும் பராமரிக்க நடவடிக்கைமேற்கொள் ளப்பட வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும் நேரம் மற்றும் பள்ளியி லிருந்து வெளியேறும் நேரத்தில் அனைத்து வாயில்க ளும் திறந்து வைக்கப் பட வேண்டும்.ஒவ்வொரு வகுப்பாக ஆசிரியரின் பாதுகாப்பில் வெளியேற்றப்பட வேண்டும்.

மேற்குறித்த கோவிட்- 19 பேரிடர் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளியில் பின்பற்றி கொரானா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top