Close
நவம்பர் 22, 2024 6:12 காலை

பிளஸ்-2 பொதுத்தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 19,332 பேர் எழுதுகின்றனர்

புதுக்கோட்டை

பிளஸ்-2 தேர்வு தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மே -2022, மேல்நிலை (பிளஸ்-2)இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 05.05.2022 அன்று தொடங்கி  28.05.2022 வரை நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 19,332 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு  எழுதுகின்றனர். மாவட்டத்தில் 91  தேர்வு மையங்களும் தனித் தேர்வர்களுக்கு 02   தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 160 பறக்கும் படை நிலையான அலுவலர்கள் பணியில் ஈடுபடு கின்றனர். 11- வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு:  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.05.2022 அன்று தொடங்கி 30.05.2022 வரை நடைபெறவுள்ளது.  இதில் 23,298  பேர் தேர்வு எழுதவுள்ளனர். மாவட்டத்தில் 119  தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கு  02-தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 190 பறக்கும் படை நிலையான அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 11 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு: மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 10.05.2022 அன்று தொடங்கி 31.05.2022 வரை நடைபெறவுள்ளது. இதில்,  மாணவ, மாணவிகள் 21,017 பேர் தேர்வு எழுதவுள்ளனர். 91 தேர்வு மையங்களும் 02 தனித் தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அமைக்கப்பட்டுள்ளன. 160 பறக்கும் படை நிலையான அலுவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். 11 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளை சுமுகமான முறையில் நடத்திட தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர்வசதி, கழிவறை வசதி, மின்வசதி ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டு சிறப்பாக தேர்வுகளை நடத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர்கள் அனைவரும் தங்களது கல்வியில் முழு கவனம் செலுத்தி தேர்வில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளை கூறுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top