Close
மே 22, 2025 6:31 மணி

புதுக்கோட்டையில் புதிய மழலையர் பள்ளி தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கூடல் நகரில் ஈரோ கிட்ஸ் மழலையர் பள்ளி தொடங்கப்பட்டது

புதுக்கோட்டையில் மழலையர்களுக்கான  புதிய ஈரோ கிட்ஸ் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் கூடல் நகரில் மழலையர்களுக்கான ப்ளே ஸ்கூல் ஈரோ கிட்ஸ் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. விழாவுக்கு தாளாளர் ஆர்எம்வீ .கதிரேசன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மண்டல மேலாளர் ராம்குமார் கலந்து கொண்டடு வகுப்பறை மற்றும் மாணவர்கள் விளையாடும் விளையாட்டு அறை ஆகிய பிரிவுகளை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னப் புதிதாக பள்ளியில் சேர்ந்த மழலையர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பலூன்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கினார்.

புதுக்கோட்டை

சமூக ஆர்வலர்  சுப்பையா, கவிஞர் தங்கம் மூர்த்தி, சென்ட்ரல் ரோட்டரி வெங்கடாஜலம் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். முன்னதாக ஆசிரியை திவ்யா வரவேற்றார், நிறைவாக ஆசிரியை ரூபா நன்றி கூறினார் நிகழ்ச்சிகளை அமலா தொகுத்து வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top