புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், தமிழ் மொழிக்காவலர்கள் மற்றும் தமிழறிஞர்களின்புகைப்பட நிரந்தரக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கம் அருகில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள், தமிழ் மொழிக்காவலர்கள் மற்றும் தமிழறிஞர்களின் புகைப்பட நிரந்தரக் கண்காட்சியினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (13.06.2022) திறந்து வைத்தார்.
நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிக் காவலர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரை நினைவுகூறும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட நிரந்தரக் கண்காட்சியைபொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிடலாம் என்றார் ஆட்சியர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.