Close
நவம்பர் 23, 2024 9:27 காலை

அரசு மருத்துவக்கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ்கண்ட ஒப்பந்த பணியிடங்கள் காலியாக உள்ளன.

கதிர்ப்பட பதிவாளர் (Radiographer): புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் காலியாக உள்ள நான்கு ஒப்பந்த அடிப்படை கதிர்ப்பட பதிவாளர் (Radiographer) பணியிடங்களுக்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் B.Sc., Radiography முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.13,300- வழங்கப்படும்.

அறுவை சிகிச்சை பிரிவு உதவியாளர் (O.T Assistant): புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை அறுவை சிகிச்சை பிரிவு உதவியாளர் (O.T Assistant) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் 3 Months O.T Technician Course from recognized University / Institutions வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.11,200- வழங்கப்படும்.

ஆரம்ப கால தலையீட்டாளர் மற்றும் சிறப்பு கல்வியாளர் (Early interventionist cum Special Educator): புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை ஆரம்ப கால தலை யீட்டாளர் மற்றும் சிறப்பு கல்வியாளர் பணியிடத் திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் M.Sc., in Disability studies (Early Intervention) with basic degree in Physiotherapy (BPT)/ Occupational therapy (BOT)/ Speech Language pathologist (ASLP)/MBBS/BAMS/BHMS. (OR) Post graduate Diploma in Early Intervention (PGDEI) with basic degree in physiotherapy (BPT)/ Occupational therapy (BOT)/ Speech Language pathologist (ASLP)/MBBS. (OR) B.Ed Special Education/ Bachelor in Rehabilitation Science/Bachelor in Mental Retardation (For the qualification mentioned at Sl.No.3 for early interventionist it would be necessary to pass an examination on early intervention domain to assess the basic knowledge of the child development process for continuation of services within 6 months of joining) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.17,000- வழங்கப்படும்.

சுகாதார பணியாளர் (Sanitory Worker): புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை சுகாதார பணியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.8,500- வழங்கப்படும்.

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (MPHW) : புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.8,500- வழங்கப்படும்.

பாதுகாவலர் (Security Guard): புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை பாதுகாவலர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.8,500- வழங்கப்படும்.
மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங் களை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை அலுவலகம், முள்ளூர், புதுக்கோட்டை மாவட்டம்.  நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.09.2023 மாலை 5.00 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மேலும், பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப் படுகிறது.மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top