Close
மே 11, 2024 2:51 மணி

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கீழ்கண்ட ஒப்பந்த பணியிடங்கள் காலியாக உள்ளன.

செவித்திறன் ஆய்வாளர் (Audiologist): புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை செவித்திறன் ஆய்வாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் Bachelor in Audiology and Speech language pathology / B.Sc., (Speech & Hearing) from RCI recognized institute தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.23,000- வழங்கப்படும்.

முடநீக்கியலாளர் (Physiotherapist): புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை முடநீக்கியளாலர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் Essential Bachelor Degree in Physiotherapist (B.P.T) முடித்திருக்க வேண்டும். மேலும், ஏதேனும் ஒரு மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பணியாற்றிய முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.13,000-வழங்கப்படும்.

பாதுகாவலர்கள் (CEmONC Security Guard): புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை பாதுகாவலர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மொத்த காலிப்பணியிடம் இரண்டு (2), இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.8,500- வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை  https://pudukkottai.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், புதுக்கோட்டை மாவட்டம் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.09.2023 மாலை 5.00 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மேலும், பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது எனவும், வரும் காலங்களில் பணிவரன் முறை செய்யப்படவோ தெரிவிக்கப்படுகிறது. அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர்  மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top