Close
நவம்பர் 21, 2024 12:59 மணி

தஞ்சாவூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 316 பேருக்கு பணி வாய்ப்பு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமை விளக்கேற்றி தொடக்கி வைத்த ஆட்சியர்  பா. பிரியங்கபங்கஜம்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  (31.8.2024) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம்  தலைமையில் நடைபெற்ற  முகாமில் 72 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.  நேர்காணலில்  1452பேர்  கலந்து கொண்டனர். அதில் தேர்வு செய்யப்பட்ட 316 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் பணி நியமன ஆணைகளை வழங்கி ஆட்சியர்  பேசியதாவது:

முதலமைச்சர் ஆணையின்படி, தனியார் துறை நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிட இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.  உயர்கல்விகளைப்பெறுவதுடன் பயிற்சியினையும், அனுபவத்தையும் பெற்றவர்களாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன் என்றார் ஆட்சியர்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சாந்தி , உதவி திட்ட அலுவலர்கள் உமா, ரதீஸ் , சீனிவாசன், செந்தில்குமார் மற்றும் மகளிர் திட்டம், ஊரக, நகர்ப்புற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top