Close
நவம்பர் 25, 2024 7:14 காலை

தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கவர்னராக இருப்பது புதிய வரலாறு: சி.பி. ராதாகிருஷ்ணன்

இந்தியா

புதிய ஆளுநர்கள் நியமனம்

தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கவர்னராக இருப்பது புதிய வரலாறு என்றார் ஜார்க்கண்ட் மாநில புதிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன் என்று கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.

திருப்பூரில்  செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்துக்கு மீண்டும் ஒரு கவர்னர் பதவியை குடியரசுத்தலைவரும், பிரதமர் மோடியும் அளித்துள்ளனர். அவர்கள் தமிழகத்தின் மீதும், தமிழ் கலாசாரத்தின் மீதும், தமிழ்மொழியின் மீது எத்தகையை அன்பும், பாசமும், மரியாதையும், பெருமையும் வைத்துள்ளனர் என்பதற்கு உதாரணமாக உள்ளது.

தமிழகத்தில் இருந்து 3 கவர்னர்கள்

தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கவர்னராக இருப்பது என்பது புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பதவியின் மூலமாக பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை எளிய மக்கள் அதிகமாக வாழும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்பை பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பணியாற்றுவேன். இது நிச்சயமாக எனக்குக் கிடைத்த பெருமையாக நான் நினைக்கவில்லை. தமிழ் இனத்துக்குக் கிடைத்த பெருமையாகும். ஆகவே, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தமிழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசுக்கும், ஜார்க்கண்ட் மாநில அரசுக்கும் பாலமாக இருந்து அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top