Close
செப்டம்பர் 20, 2024 3:42 காலை

நாட்டில் 10 அணு உலைகள் அமைப்பதற்கு ஒப்புதல்: ஒன்றிய அரசு தகவல்

இந்தியா

நாட்டில் 10 அணு உலைகளே அமைக்க அனுமதி

நாட்டில்  10  அணு உலைகளை அமைப்பதற்கு  பெரிய அளவிலான ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு இன்று தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கையை மக்களவையில் இன்று மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை   இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சமர்ப்பித்தார்.

கர்நாடகாவில் கைகா, ஹரியானாவில் கோரக்பூர், மத்தியப் பிரதேசத்தின்  சட்கா, ராஜஸ்தானில் மஹி பன்ஸ்வாரா ஆகிய இடங்களில் அணு உலைகள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகமும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் இணைந்து நிசார் என்னும் புவி அறிவியல் செயற்கைக் கோளை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-22-ம் ஆண்டில் நாட்டில் மொத்த மின் உற்பத்தியில் 3.15 சதவீதத்துடன் அணுமின் உலைகள் 47,112 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.

இது குறித்து மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், தற்போதைய அணுமின் உற்பத்தி திறன் 6780 மெகாவாட்டாக உள்ள நிலையில் அதனை 2031-ம் ஆண்டுக்குள் 22480 மெகாவாட்டாக  உயர்த்து வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top