2023-ஆம் ஆண்டிற்கான 3 பத்ம விபூஷன், 5 பத்ம பூஷன் மற்றும் 47 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை (05.04.2023) நடைபெற்ற நிகழ்வில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி சிறப்பித்தார்.
தமிழகத்தை சேர்ந்த மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்-க்கு பத்ம பூஷன் விருது/வாணி ஜெயராமுக்கான விருதை அவரின் உறவினர் பெற்றுக்கொண்டார்.
ஆஸ்கர் விருதுபெற்ற கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப் பட்டது பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பிற அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கலை, சமூக பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்றவை உட்பட ஆறு பத்ம விபூஷன், ஒன்பது பத்ம பூஷன் மற்றும் 91 பத்மஸ்ரீ என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 106 பத்ம விருதுகளை இந்திய அரசு அறிவித்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம பூஷண் விருதினைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுள்ள கே. கல்யாணசுந்தரம்பிள்ளை, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன், பாலம் கல்யாணசுந்தரம் மற்றும் டாக்டர் கோபால்சாமி வேலுச்சாமி ஆகியோருக்கு வாழ்த்துகளை பல்வேறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்