Close
மே 10, 2024 12:41 மணி

நாட்டில் கொரோனா பாதிப்பு … அண்மைச் செய்திகள்

இந்தியா

கொரோனா தாக்கம்

இந்தியாவில் தற்போது 23,091 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.05 சதவீதமாகும்.தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.76 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 4,435 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 2,508  பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,79,712 பேர்.

தினசரி பாதிப்பு விகிதம் 3.38% வாராந்திர பாதிப்பு விகிதம் 2.79%. இதுவரை மொத்தம் 92.21 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,31,086 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 1,979 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள் ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top