புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 7th Hero – Asian Champions Trophy, Pass the Ball Trophy கோப்பை பயணக்குழுவினருக்கு வரவேற்பளிக்கும் நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று கோப்பையினை காட்சிப்படுத்தினார்.
புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் 7 th Hero – Asian Champions Trophy, Pass the Ball Trophy Tour நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (25.07.2023) கோப்பையினை காட்சிப்படுத்தினார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது;
இந்தியாவின் விளையாட்டு தாயகமான தமிழ்நாட்டில் பெருமைக்குரிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தப்படுவது நமக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமையாகும். இதன்மூலம் உலக தரத்தில் அனைத்து விதமான போட்டிகளையும் தமிழகத்தில் நடத்துவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். மேலும் ஹாக்கி விளையாட்டு வீரர்களிடையே உற்சாகம் மற்றும் ஊக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹாக்கி விளையாட்டு போட்டிகளில் நெடிய பாரம்பரிய நமது இந்திய அணியின் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் சென்னையில் நடைபெற உள்ள ஹாக்கி போட்டியை சிறப்பான பங்களிப்பை வழங்குவதன் மூலம் 8 பதக்கங்களை வென்ற நமது இந்திய அணிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திடும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 400 விளையாட்டு வீரர்கள் இருப்பது நமக்கு பெருமைக்குரிய ஒன்றாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுத்துறையில் எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, தமிழ்நாடு அரசு, ஹாக்கி யுனிட் ஆப் இந்தியாவுடன் இணைந்து சர்வதேச அளவிலான 7th Hero – Asian Men’s Champions Trophy – 2023 ஹாக்கி போட்டியினை சென்னையில் வருகின்ற 03.08.2023 முதல் 12.08.2023 வரை நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் இந்தியா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான், சீனா மற்றும் மலேசியா என 6 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.
இப்போட்டியானது முன்பு 2007-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் இப்போட்டியானது நடத்தப்படுவது நமது தமிழ்நாட்டிற்கு மிகச் சிறப்பான நிகழ்வாக பார்க்கப்படு கின்றது.
இப்போட்டிக்கான Trophy – Pass the Ball Trophy Tour – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் (Hon’ble Minister of Youth Affairs and Sports) டெல்லியில் தொடக்கி வைத்தார்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கடந்த 20.07.2023 அன்று சென்னை வந்தடைந்தது. சென்னையில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரால் சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டு காட்சிப்படுத்தும் விழா நடைபெற்றது.
மேலும் இப்போட்டிக்கான Trophy (கோப்பை) காட்சிப் படுத்து தல் நமது மாவட்டங்களிலுள்ள விளையாட்டு வீரர்களிடையே ஹாக்கி போட்டிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 22.07.2023 அன்று துவங்கப்பட்டுள்ளது.
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி, ஹாக்கி விளையாட்டு வீரர்கள் மற்றும் அனைத்து விளை யாட்டு வீரர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்றையதினம் போட்டிக்கான கோப்பையினை காட்சிப்படுத்தும் விழா, மாவட்ட நிர்வாகத்துடன், மாவட்ட ஹாக்கி கழகமும் இணைந்து மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளளார்கள்.
பல்வேறு மாவட்டங்களுக்கு இக்கோப்பையானது (Pass the Ball Tour) பயணம் செய்து 01.08.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. கடந்த 2020 ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது இந்தியா வெண்கலத்தை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்தது போல இப்போட்டியிலும் இந்திய ஹாக்கி வீரர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையினை வெல்ல வேண்டும்.
இந்த Pass the Ball Trophy Tour -ன் நோக்கம் நமது தமிழ்நாட்டி லிருந்து அதிக அளவிலான ஹாக்கி வீரர்கள் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்ற Pயசளை-2024 ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்ல வேண்டுமென்பதாகும். இந்த சிறப்பான 7 th Hero – Asian Champions Trophy, Pass the Ball Trophy Tour – 2023 கோப்பை காட்சிப்படுத்தும் விழாவிற்கு வருகை தந்துள்ள பள்ளி, கல்லூரி, வீரர், வீராங்கனைகள் அனைவரும் சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டிகளில் பங்குபெற்று நமது தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடிதர வேண்டும் என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.
முன்னதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஹாக்கி விளையாட்டு வீராங்கனைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி, விளையாட்டு அரங்கில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், வருவாய் கோட்டாட்சியர் திரு.முருகேசன், மாவட்ட விஜயலெட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;