Close
நவம்பர் 24, 2024 9:10 மணி

சாகர் பரிக்ரமா திட்டம்: சென்னையி லிருந்து நெல்லூருக்கு கடல் வழி பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா

சென்னை

சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் தசென்னை துறைமுகத்திலிருந்து கடல் வழி பயணத்தை தொடங்கிய  மத்திய கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா.  உடன் இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், சென்னை துறைமுக தலைவர் சுனில் பலிவால் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள்.

சாகர் பரிக்ரமா திட்டம்: சென்னையிலிருந்து நெல்லூருக்கு கடல் வழி மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பயணம் மேற்கொண்டார்
சாகர் பரிக்ரமா திட்டத்தின் ஒரு பகுதியாகமத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா  சென்னையிலிருந்து நெல்லூருக்கு திங்கள்கிழமை கடல் வழி பயணத்தை மேற்கொண்டார்.
சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் கடல் வழி பயண தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  இதில் மத்திய அமைச்சர்  பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டு  கடலோர காவல் படைக்கு சொந்தமான சுஜய் கப்பலில் ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை பயணத்தை தொடங்கினார்.
அப்போது பர்ஷோத்தம் ரூபாலா செய்தியாளர்களிடம் கூறியது,
சாகர் பரிக்ரமா திட்டத்தின் முக்கிய நோக்கம் மீனவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளைப் பெறுதல், மீனவர்களுக்கான மத்திய அரசின் திட்டத்தை  அவர்களிடம் எடுத்துரைத்தல், பயனாளிகளுக்கு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்டவைகள் அடங்கும் .
இதுவே இந்த பயணத்தின் முக்கியமான நோக்கமுமாகும். மத்திய அரசு சார்பில் மீன்வளத் துறைக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.38,500 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.  இந்த ஆண்டு ஜனவரி 1 முதல்  6 தேதி வரை வரை ஆந்திரா மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் சாகர் பரிக்ரமா திட்டம் குறித்து பயணங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இத்திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 5 ம் தேதி என்று அன்று குஜராத் மாநிலம் மாண்டவியில் தொடங்கியது. இதுவரை ஒன்பது கட்டங்கள் குஜராத், டாமன் மற்றும் டையூ, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, அந்தமான்  நிக்கோபார், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகிய கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று முடிந்துள்ளன.
10-வது கட்டமஈக ஆந்திராவின் மீதமுள்ள கடலோர மாவட்டங்களான நெல்லூர், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கோணசீமா, காக்கிநாடா, விசாகப்பட் டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், ஏனாம் (புதுச்சேரி யூனியன் பிரதேசம்) ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் கடல் வழி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு மீனவர்களுடனான சந்திப்புகள் நடைபெறும்.
ஆந்திர மாநிலத்தில் மத்திய அரசின் முதன்மைத் திட்டங்க ளில் ஒன்றான பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ், மீன்வளத் துறையில் 5 ஆண்டுகளுக்கு  ரூ. 2,300 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது என்றார் ரூபாலா.
இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top