Close
மே 18, 2024 4:14 காலை

கிழக்கு கடல்வழி வழித்தடத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியா-ரஷ்யா இடையே பயிலரங்கம்

சென்னை

இந்தியா-ரஷ்யா கூட்டு கருத்தரங்கம்

கிழக்கு கடல்வழி வழித்தடத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியா-ரஷ்யா இடையேயான பயிலரங்கம்சென்னையில் இன்று நடைபெறுகிறது
இந்தியா ரஷ்யா நாடுகள் இடையேயான கிழக்கு கடல்சார் வழித்தடத்தை செயல்படுத்துவது குறித்த பயிலரங்கம் சென்னையில் இன்று புதன்கிழமை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை துறைமுக நிர்வாகம்  செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை துறைமுகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:
தற்போது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகத்தின் பெரும்பகுதி மேற்கு கடல் வழி தடம் வழியாக நடைபெற்று வருகிறது.   இந்தியாவின் மேற்கு கடற்கரை யையும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கையும் சூயஸ் கால்வாய் மற்றும் பால்டிக் கடல் வழியாக இணைக்கிறது. இதற்கு மாற்றாக கிழக்கு கடல்வழித்தடம்  (EMC-Eastern Maritime Corridor) வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து மேற்கொள்ள உள்ளது.
இந்த வழித்தடம் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுகங்களை மலாக்கா ஜலசந்தி, தென் சீன கடல் மற்றும் ஜப்பான் கடல் வழியாக தூர கிழக்கு ரஷ்ய துறைமுகங்க ளுடன் இணைக்கிறது.  இவ்வழித்தடம் மேற்கு கடல் வழித்தடத்தை விட சுமார் 40 சதவீதம்  குறைவான தூரமே கொண்டுள்ளது. பயண நேரமும் மேலும் சுமார் 18 நாள்கள் வரை குறைவாக இருக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான நேரமும் செலவினங்களும் கணிசமாக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கிழக்கு பொருளாதார மன்றம்:
செப்டம்பர் 2023-ல் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற கிழக்குப் பொருளாதார மன்ற கூட்டம் நடைபெற்றது.  இதில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை மத்திய அமைச்சர்  சர்பானந்தா சோனோவால்,  ரஷ்ய அமைச்சர் அலெக்ஸி செக்குன்கோவ் ஆகியோர் சந்தித்து பேசினார். ரஷ்யாவின் தூர கிழக்கு மற்றும் ஆர்க்டிக்கின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்தியா ரஷ்யா இடையே கிழக்கு கடல் வழி தடத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து விவாதிப்பதற்கான பயிலரங்கம் சென்னையில் புதன் கிழமை நடைபெறுகிறது. தூர கிழக்கு மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் கலைத்துறைக்கான  துணை அமைச்சர் அனடோலி யூரிவிச் போப்ராகோவ் தலைமையில் ரஷ்ய நாட்டின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
அமைச்சர் சர்வானந்தா சோனாவால் தொடங்கி வைக்கிறார்:
இப்பயிலரங்கத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை மத்திய அமைச்சர்  சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைக்கிறார். இதில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், எஃகு அமைச்சகம் போன்றவற்றின் முக்கிய  அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் .
இந்திய எஃகுத் துறை, நிலக்கரித் துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு, உரங்கள், கப்பல் வழித்தடங்கள், துறைமுகங்கள் மற்றும் முனையங்கள் போன்றவற்றின் உயர்மட்ட வணிகத் தலைவர்கள் ரஷ்ய நாடுகளுடன் இருதரப்பு விவாதங்களில் தீவிரமாகப் பங்கேற்று இருதரப்பு விவாதங்களில் ஈடுபடுவார்கள்.
கிழக்கு கடல்வழி பாதையானது இந்தியாவிற்கும் ரஷ்ய கூட்டமைப்புக்கும் இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்து வதற்கும், குறிப்பாக கச்சா எண்ணெய், எல்என்ஜி, நிலக்கரி, உரங்கள் மற்றும் கொள்கலன்கள், இரு நாடுகளின் முக்கிய துறைமுகங்களை இணைப்பதற்கும், பொருளாதார ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைத் திறப்பதற்கும் இப்பயிலரங்கம் உறுதுணையாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top