பாதுகாப்பான பயணம், பேருந்துகளை விட குறைந்த கட்டணம், பயண தூரத்தை விரைவாக அடையும் வசதி, விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை போன்ற காரணங்களினால் ரயில் பயணங்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் ஒருமைப்பாட்டை முதலில் ரயில் மூலம் இணைத்தவர்கள் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள். அவர்கள் காலத்தில் நிலக்கரியில் இயங்கிய நீராவி என்ஜின் ரயில் காலப்போக்கில் நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் டீசல் என்ஜின் ரயில், மின்சார ரயில் என பரிணாம வளர்ச்சி பெற்றது. இன்று நமது நாட்டில் இயக்கப்படும் ரயில்களில் பெரும்பான்மையானவை எலக்ட்ரிக் ரயில்கள் தான். அதற்கு தகுந்தாற்போல் ரயில் தண்டவாளங்கள் அகலப்பாதையாக மாற்றப்பட்டு மின்மயமாக்கப்பட்டு உள்ளது.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய ரயில்வேயும் தன்னை மாற்றி அமைத்துக்கொண்டு வருகிறது. தனியார்மயம் பற்றிய எதிர்ப்புகள் ஒரு புறம் இருந்தாலும் இந்திய ரயில்வே வளர்ச்சி பாதையை நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டு தான் இருக்கிறது.
இதன் காரணமாக தான் நாட்டின் பல பகுதிகளில் தற்போது மெட்ரோ, வந்தே பாரத், தேஜஸ் ரயில்கள் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கின்றன. இதன் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடிகிறது. இதனால் நாட்டின் உற்பத்தி மற்றும் வணிகம் பெருகி வருகிறது.
சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்று உள்ளன. அதற்கு காரணம் மெட்ரோ ரயில்கள் வழங்கும் இனிமையான பயண சேவை. குலுக்கல் இல்லாத வேகமான பயணம், விமான நிலையங்களை போன்று நவீன வசதிகளுடன் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் பயணிகளை பெரிதும் கவர்ந்து உள்ளன.‘
சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு திரும்பும் கோவை, மதுரை மற்றும் திருச்சி வாசிகள் தங்களது ஊருக்கு மெட்ரோ ரயில் சேவை எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து வருகின்றன. இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ந்தேதி தொடங்கியது. புது டெல்லியில் இருந்து வாரணாசி புறப்பட்ட இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களிலும் முக்கிய நகரங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 24ந்தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இது நாட்டின் 28வது வந்தே பாரத் ரயில் ஆகும்.
திருநெல்வேலியில் காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். மறு முனையில் சென்னை எழும்பூரில் பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியை இரவு 10.40 மணிக்கு அடைகிறது.
விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில்கள் நின்று செல்லும், வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
வந்தே பாரத் ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் குளிரூட்டப்பட்ட வசதி, பயண நேரத்தில் உயர்தர உணவு, உட்காருவதற்கும் நடந்து செல்வதற்கும் வதியான இட வசதி, சொகுசு இருக்கைகள், வைபை வசதி இருப்பது இந்த ரயிலின் சிறப்பாகும்.
பகல் நேரங்களில் மட்டுமே இயங்கி வரும் வந்தே பாரத் ரயில் சேவையை இரவிலும் இயக்க வேண்டும் என்பது நாடும் முழுவதும் உள்ள ரயில் பயணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதன் காரணமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியில் இந்திய ரயில்வே தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இந்தியாவில் நீண்ட தூர ரயில் பயணத்தில் புரட்சியை ஏற்படுத்த உள்ளன, இது ஒரே இரவில் பயணங்களுக்கு ஆறுதல், வேகம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை உறுதியளிக்கிறது. BEML மற்றும் Rail Coach Factory (RCF) மூலம் ஸ்லீப்பர் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலாது புதுடெல்லி மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும். இது தேசிய தலைநகரை ஜம்மு மற்றும் காஷ்மீருடன் இணைப்பதன் மூலம் ஒரு மைல்கல்லைக் குறிக்கும். இந்த ரயில் ஜனவரி 2025 முதல் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏறக்குறைய 800 கிலோமீட்டர்களை உள்ளடக்கிய இந்த பாதையானது பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, சுமார் 13 மணி நேரத்தில் பயணத்தை முடிக்கும். டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-சென்னை போன்ற அதிக தேவை உள்ள தாழ்வாரங்களில் சாத்தியமான விரிவாக்கங்கள் உட்பட எதிர்கால வழித்தடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
வந்தே பாரத் ஸ்லீப்பர் மூன்று வகுப்புகளைக் கொண்டிருக்கும்: ஏசி முதல் வகுப்பு, ஏசி 2-அடுக்கு மற்றும் ஏசி 3-அடுக்கு. ஒரு ரயிலுக்கு 16 பெட்டிகளுடன், 11 ஏசி 3-அடுக்கு, நான்கு ஏசி 2-அடுக்கு மற்றும் ஒரு முதல் வகுப்பு பெட்டிகள் உட்பட மொத்தம் 1,128 பயணிகளின் கொள்ளளவு உள்ளது.
உத்தியோகபூர்வ விலைகள் நிலுவையில் இருக்கும்போது, கட்டணங்கள் ராஜதானி மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் போன்ற பிற பிரீமியம் ரயில்களுடன் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மதிப்பீடுகள் பின்வருமாறு:
- ஏசி 3-அடுக்கு : தோராயமாக ₹2,000.
- ஏசி 2-அடுக்கு : சுமார் ₹2,500.
- ஏசி முதல் வகுப்பு : தோராயமாக ₹3,000.
- டைனமிக் விலை நிர்ணயம் பொருந்தும், முன்கூட்டியே முன்பதிவு செய்தல் அல்லது அதிக நேரம் இல்லாத பயணங்களுக்கு தள்ளுபடிகள்
- வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுடன், இந்திய இரயில்வே இரயில் பயணிப்பவர்களுக்கு ஆறுதல், வேகம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையை வழங்க உள்ளது. இந்த அம்சங்கள் வந்தே பாரத் ஸ்லீப்பரை இந்தியா முழுவதும் நீண்ட தூர பயணத்திற்கான ஒரு நம்பிக்கைக்குரிய மேம்படுத்தலாக மாற்றுகிறது,