Close
நவம்பர் 18, 2024 12:11 காலை

விதிமுறை மீறல்:பாஜக, காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கெடு

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதி உள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்களில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேர்தல் கமிஷனில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகள் பரஸ்பரம் புகார் அளித்தன. தற்போது இந்த புகார்கள் தொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் பதில் கேட்டு கடிதம் எழுதியுள்ளது. பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் தேர்தல் ஆணையம் பதில் கேட்டுள்ளது. இரு தரப்பினரும் திங்கள்கிழமை அதாவது நவம்பர் 18ஆம் தேதி மதியம் 1:00 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலின் போது 22 மே 2024 அன்று வழங்கப்பட்ட ஆலோசனையை தேர்தல் ஆணையம் இரு கட்சிகளுக்கும் நினைவூட்டியது. இந்த ஆலோசனையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​பொது நடத்தை மீறப்படாமல் இருக்கவும், தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்படவும் நட்சத்திர பிரச்சாரகர்கள் மற்றும் தலைவர்களை கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஜார்க்கண்டில் ஒரு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் மீதமுள்ள தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜகவும், காங்கிரஸும் ஒருவர் மீது ஒருவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக பதில் அளிக்குமாறு பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top