Close
டிசம்பர் 25, 2024 4:00 மணி

அமெரிக்க குற்றச்சாட்டுகளை முறியடித்து அதானி மீண்டு வருவாரா?

பிரபல தொழில் அதிபர் கெளதம் அதானி-கோப்பு படம்

அதானி விவகாரம் மறுபடியும் பெரிய அலையாக எழுப்பப்படுகின்றது, ஆனால் இதெல்லாம் சிறிய சலசலப்புகளை ஏற்படுத்தலாமே தவிர நிச்சயம் ஜார்ஜ் சோரஸ் நினைப்பது போல் பெரிய விளைவுகளை ஏற்படுத்துமா என்றால் நிச்சயமில்லை.  அதாவது இந்தியாவுக்கோ அதானிக்கோ அது பாதகமாய் நிச்சயம் வராது.

இந்த சலசலப்பின் மூலம் புதிய இந்தியா, புதிய இந்தியா என்றால் உலகெல்லாம் தொழில்வாய்ப்பை பெறும் இந்த வலுவான பொருளாதார பலம் கொண்ட இந்தியா.

ஒரு நாட்டுக்கு தொழிலதிபர்கள் முக்கியம். அவர்கள் கொட்டும் வரிபணமும் பெற்றுக்கொடுக்கும் வேலைவாய்ப்பும் உள்நாட்டு தொழில் பொருளாதார பலமும் அப்படியானது.

அமெரிக்கா, சீனா என எல்லா நாட்டிலும் தொழில்அதிபர்கள் தான் நாட்டை தாங்கி நிற்பார்கள். சிறிய தேசமாயினும் இஸ்ரேல் பலம்பெற்று நிற்க அதன் அறிவுமட்டுமல்ல, அங்கே அவர்கள் சம்பாதிக்கும் பெரும் பணமும் காரணம்.

இந்தியாவில் இப்படி பலர் உருவாகி விடக் கூடாது. அப்படி உருவானால் சுமார் 300 ஆண்டுகாலம் ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பிய கம்பெனிகள் பாதிக்கப்படும் என்பது மேற்குலகில் உள்ள பலரின் அச்சம்.

மோடி அதை மாற்றினார். இந்தியாவில் இந்தியருக்கே முன்னுரிமை இந்தியாவின் நட்பு நாடுகளில் இந்தியாவுக்கே முன்னுரிமை என மாற்றினார்.

அதில் அதானி குழுமம் மிக வேகமாக வளர்ந்து பல நாடுகளின் துறைமுகம், எரிசக்தி, விமான நிலையம் என பலவற்றை தன் கைக்குள் கொண்டு வந்தது. இந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவின் அண்டை நாடுகள், அரேபியா ஐரோப்பா, லத்தீன், அமெரிக்கா என எல்லா இடங்களிலும் அதன் ஆதிக்கம் வளர்ந்தது. ஒவ்வொரு இந்தியனும் பெருமைகொள்ளும் படியான வளர்ச்சி இது.

இது நிச்சயம் பல சக்திகளுக்கு பிடிக்காது. இதனால் அதானியினை முடக்கினால் பல நாடுகளில் அதானி ஒதுக்கப்படுவார், அந்த தொழில் வாய்ப்பை பல மேல்நாட்டு நிறுவனம் பெறும் என்பது அவர்கள் கணக்கு.

இங்கே தான் ஜார்ஜ் சோரஸ் கொண்டு வரப்பட்டார். ஜார்ஜ் சோரஸ் ஒரு நிழல் மனிதர். மறைந்திருந்து உலகெல்லாம் தன் அம்புகளை ஊடகம் இன்னும் பல தொழிலதிபர்கள் மூலம் ஏவி பல குழப்பங்களை ஏற்படுத்துபவர்.

சுமார் 300 ஆண்டு காலம் ஐரோப்பியர்கள் ஏகபோகமாக ஆட்டம் போட்ட இடம் இந்தியா. 1947ல் அடங்கியிருக்க வேண்டிய அவர்கள் ஆட்டம் நேருவாலும் காங்கிரசாலும் 2014 வரை நீண்டது. மோடி வந்த பின்பே இந்தியா சுதந்திரக் காற்றை பொருளாதார ரீதியாக சுவாசித்தது.

அதுவரை எல்லாமே அந்நிய ஆதிக்கங்கள் டாடா, ரிலையன்ஸ் எல்லாம் ஒருகட்டத்துக்கு மேல் செல்ல முடியாத படி காங்கிரசின் பொருளாதார கொள்கைகள் இருந்தன. உள்ளூர் ஊழல் தனிகணக்கு. மோடி இதை மாற்றினார், இந்தியர் தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்தார். இந்திய தொழிலபதிபர்கள் வளர்ந்தனர்.

விடுமா அந்நிய சக்திகள்? இங்குள்ள சில அரசியல் கட்சிகள், அதன் தலைவர்களை நம்பி, மோடிக்கு எதிராக பெரும் பணத்தை செலவிட்டனர். அத்தனையும் தோல்வியில் முடிந்தது. இரண்டாம் முறையும் இந்திய அரசியல்வாதிகளை நம்பினார்கள். மோடி ஆட்சி மாற்றப்பட்டால் போதும் பொருளாதார கொள்கைகள் ஓசைப்படாமல் மாறும் இந்திய தொழிலதிபர்கள் சரிவார்கள் என கணக்கிட்டார்கள். அந்த கணக்கும் பொய்த்து போனது.

இதனால் வேறுவகையில் அதானியினை முடக்க முனைந்தார்கள், அதானி ஒதுக்கபட்டால் சுமார் பல லட்சம் கோடிகள் கொண்ட தொழில்வாய்ப்பு பலருக்கு கிடைக்கும். சோரஸ் உரிய கமிஷனை பெற்றுகொள்வார். இதனால் ஹின்டர்பர்க் அறிக்கையில் அதானியினை இழுத்துவிட்டு முடக்க நினைத்தார்கள், ஆனால் அது பெரும் தோல்வியில் முடிந்தது.

இது ஜோ பைடன் விடைபெறும் நேரம். டிரம்ப் ஜனவரியில் வந்து விட்டால் எல்லாமே மாறும் என்பதால் கடைசி வாய்ப்பினை கையில் எடுத்து விட்டார்கள். அமெரிக்க தொழில் மற்றும் முதலீட்டு சட்டம் மூலம் இப்போது கடைசி அஸ்திரம் வீசுகின்றார்கள்.

அதாவது அமெரிக்க குடிமக்கள் உலகில் எந்தநாட்டு நிறுவன பங்கையும் வாங்கலாம், அந்த நிறுவனம் பற்றி கேள்வி கேட்கலாம். இது அமெரிக்க சட்டம் கொடுக்கும் சலுகை.

பங்குசந்தை விதிமுறைபடி அதானியின் பங்குகளை யாரும் வாங்கலாம். அப்படி அமெரிக்கர்களும் வாங்கலாம். அதில் சோரஸ் ஆட்களும் உண்டு. இப்படி வாங்கியவர்கள் உரிய விகித தொகையினை பெற்றுக் கொண்டு சும்மா இருப்பார்களா என்றால் இல்லை. வந்ததே குழப்பம் செய்ய அல்லவா?

அதனால் அப்படியான பங்குதாரர்கள் இந்த அதானி தன் தொழிலுக்காக இந்தியா முழுக்க லஞ்சம் கொடுத்தார் அது 2200 கோடி ரூபாய், இப்படி முறைகேடாக தொழில்செய்வது சட்டவிரோதம், அமெரிக்க நீதிமன்றம் எங்களுக்கு நீதிவழங்கி அந்த அதானியினை தண்டிக்க வேண்டும் என கோரிகை விடுத்தார்கள். அமெரிக்க நீதிமன்றமும் தம் மக்கள் கோரிக்கைபடி அதானி விசாரிக்கபட வேண்டியவர் என சொல்லி விட்டது.

இந்த இடத்தில் இருந்து தான் ராகுல் தன் ஆட்டத்தை தொடங்கினார். அவரின் ஆட்டத்தை கண்டதும் ஊடகங்கள் ஆட தொடங்கின‌. அதை கேட்டதும் பலர் ஆடிகொண்டிருக்கின்றார்கள். விஷயம் சரியாக நாடாளுமன்ற கூட்டத்துக்கு முன்னால் ஏவபட்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

அதாவது இந்திய நாடாளுமன்றத்தில்  கொண்டு வரப்படும் வக்ஃப் வாரிய சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட திருத்தம் என முக்கிய தீர்மானம் வருவதால் எதிர்கட்சிகளுக்கு பெரும் சந்தோஷம்.

அதாவது இந்திய தேசம் முன்னேறக் கூடாது எனும் ஒரே கொள்கை கொண்டதாலும் , நாடாளுமன்றத்திற்கு குழப்பம் செய்யவே சென்றிருப்பதாக கருதுவதாலும் அவர்கள் அதானியினை கைது செய் என சொல்லி இந்த கூட்ட தொடரை குழப்ப முயன்றார்கள். செய்தார்கள்.

ஏதோ அமெரிக்க நீதிமன்றம் சொன்னதற்காக இந்தியனை கைதுசெய் என கிளம்புகின்றார்கள் என்றால் இவர்கள் நாட்டுபற்று எப்படியானது?

இன்றே இப்படி என்றால் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் வ..உ.சி, நேதாஜியெல்லாம் காங்கிரசாரிடம் என்னபாடு பட்டிருப்பார்கள்?, சரி, அவ்வளவு சுத்தமானவ்ர்கள் என்றால் அந்த போபர்ஸ் குவாத்ரோச்சியினை கொண்டு வந்தார்களா இல்லை போபால் விபத்தில் ஆண்டர்சனை பிடித்து வந்தார்களா?

விஜய் மல்லையாவினை, நீரவ் மோடியினை அழைத்துவர ஒரு வார்த்தை தான் பேசினார்களா? ஆக மோசடிகாரனையெல்லாம் விட்டுவிட்டு சரியாக தொழில் செய்பவரும் இந்தியாவில் இதுவரை ஒரு சர்ச்சையில் சிக்காதவருமான அதானியினை பிடி என்றால் இவர்கள் எப்படிபட்டவர்கள்?

அதானி ஒரு இந்தியர். இந்திய தொழிலதிபர், இந்திய தேசத்தில் அவர் எவ்வித சர்ச்சையும் செய்யாதபோது எங்கோ அமெரிக்காவில் சொன்னதற்காக அவரை கைது செய்யவேண்டுமென்றால் இந்தியா சுதந்திர நாடா இல்லை இன்னும் அந்நியர் அடிமை நாடா?

இங்கு நடப்பது இந்தியருக்கான ஆட்சியா இல்லை அன்னியருக்கான ஆட்சியா? இதையெல்லாம் இந்திய மக்களும் இந்திய ஊடகங்களும் உணர்தல் வேண்டும். நிச்சயம் மக்கள் உணர்வார்கள்.

இதெல்லாம் நாட்டை, நாட்டுப்பற்றாளர்கள்களை தேசத்துக்காக பாடுபடுபவர்களை அந்நியருக்கு காட்டிகொடுக்கும் அப்பட்டமான முயற்சி. அதானி ஒன்றும் எதையும் அள்ளி செல்ல போவதில்லை, அவரின் தொழிலால் வேலைவாய்ப்பு பெருகும் இன்னும் இந்திய பணம் மிச்சமாகும், தொழிலை இந்தியர் செய்வதால் அன்னிய செலாவணி மிஞ்சும் வருமானவரி பெருகும்.

இதெல்லாம் கூடாது, அந்நிய நிறுவணம் சம்பாதித்து வெளிநாடு வளரட்டும் இந்த தேசம் அவர்களை நம்பியே வாழட்டும் அவர்கள் நம்மை உறிஞ்சட்டும் என மிக கொடிய தேசவிரோத சிந்தனையுடன் பேசிகொண்டிருக்கின்றார் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர்.

சரி இந்த வழக்கு என்னாகும்? ஒன்றும் ஆகாது. வழக்கின் தன்மையினை பாருங்கள், அதானி இந்திய அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் சுமார் 2200 கோடி கொடுத்தார் என்பது. இதற்கு ஆதாரம் பெறமுடியுமா? அப்படி எளிதில் சிக்குமளவு இந்திய அரசியல்வாதிகள் சாதாரமானவர்களா? நடக்குமா? இப்படியான நிலையில் எந்த ஆதாரம் திரட்டமுடியும்? என்ன அடிப்படையில் வழக்கு அதுவும் அமெரிக்காவில் நடத்த முடியும்? அப்படியே நடந்தாலும் அது அவரை எப்படி பாதிக்கும்?

ஏற்கனவே அமெரிக்க தடை விதிக்கபட்டவர்கள் உலகில் அதிகம். புதின் முதல் வடகொரிய தலைவர் இன்னும் ஏகபட்ட தொழிலதிபர்கள் உண்டு. சீன தொழிலதிபர்கள் உண்டு. யாருக்கு என்னாயிற்று?

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மேல் கூட சர்வதேச நீதிமன்றம் சர்ச்சை வெளியிட்டுள்ளது அவர் கொஞ்சமும் கவலைப்படுவாரா? ஏன் குஜராத் முதல்வராக இருந்தபோது மோடிக்கே விசா மறுத்த நாடு அமெரிக்கா, இன்று மோடி இல்லாவிட்டால் அமெரிக்க செல்லாக்கு உலகில் இல்லை என பணிந்து கிடக்கின்றது.

ஆக இதெல்லாம் ஜோ பைடனின் கடைசி ஒரு மாதத்தில் ஏதாவது செய்து விட முடியாதா என பல தலைகள் செய்யும் கடைசி முயற்சி.

பைடன் விடைபெறும் நேரம் உக்ரைன் போர் தீவிரமாகின்றது. அப்படியே இந்த கும்பல் நடத்தும் மணிப்பூர் பிரச்சினை அதி தீவிரமாகின்றது, அதன் வழியே கடைசி முயற்சியாக அதானிமேல் கடைசி அஸ்திரம் பாய்ச்சபடுகின்றது.

எதிரி அதைத்தான் செய்வான், சோரஸ் கும்பல் அதை செய்யும். இனி அவர்களுக்கு எதிர்காலமில்லை. டிரம்ப் அதிகாரம் கைக்கு வந்தபின் இவர்கள் கதையை முடித்து விடுவார், மோடிக்கு ஆதரவாக மாறிய டிரம்ப் இவர்களை இல்லாது செய்து விடுவார் என அஞ்சும் கும்பல் கடைசியில் பல குழப்பங்களை செய்ய முயல்கின்றது. இது அதானிக்கு பெரிய இழப்பை கொடுக்காது, சிறிய சரிவுடன் அவர் மீண்டு விடுவார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top