Close
ஜனவரி 23, 2025 6:59 காலை

திருப்பதியில் போலி டிக்கெட்: ஐந்து பேர் கைது

திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்களுக்கு போலி டிக்கெட் விற்பனை செய்யும் கும்பலை திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கும்பல், 300 ரூபாய்க்கு போலி சிறப்பு நுழைவு டிக்கெட்டுகளை பக்தர்களுக்கு விற்பனை செய்து வந்தது.

திருப்பதி ஏழுமலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கடந்த 10-ம் தேதி முதல் பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனம் செய்து வருகின்​றனர்.

இந்நிலை​யில், 11 பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்ய ரூ.300 மதிப்புள்ள டிக்கெட்டுகளுடன் திருமலையில் வைகுண்ட க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்றனர். அங்கு டிக்​கெட்டை ஸ்கேன் செய்த போது அவை போலி என்று தெரியவந்தது.

இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அந்த 11 பேரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் திருப்பதி தீயணைப்புதுறை ஊழியர் மணிகண்டா என்பவர் மூலம் 11 டிக்கெட்டுகளை ரூ.19 ஆயிரம் கொடுத்து வாங்கியதாக தெரிவித்தனர்.

மணிகண்டாவை பிடித்து விசாரித்த​போது, அவர் இடைத்தரகர் போல் செயல்பட்டு திருப்பதிக்கு வரும் பக்தர்களிடம் திருப்பதி டாக்ஸி ஓட்டுநர் சசி மற்றும் சென்னை டாக்ஸி ஓட்டுநர் ஜெகதீஷ் ஆகியோர் மூலம் அதிக பணம் வசூலித்துள்ளார்.

தரிசன கவுன்ட்டரில் பணியாற்றும் தேவஸ்தான ஊழியர் லட்சுமிபதி மூலம் போலியாக ரூ.300 டிக்கெட்டுகளை வாங்கி தரிசனத்துக்கு பக்தர்களை அனுப்பி வைப்பது தெரியவந்தது. இதற்கு மற்றொரு தீயணைப்பு படை வீரர் பானுபிரகாஷும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் காவல்துறையினர்  கைது செய்து ​விசாரணை நடத்தி வருகின்​றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top