Close
ஜனவரி 22, 2025 10:00 மணி

கும்பமேளாவில் வியக்க வைத்த விருந்தினர்…

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி மகா கும்பமேளாவுக்கு வந்திருப்பதை தேசம் பாரத வரவேற்கின்றது.

இந்த நூற்றாண்டில் கையடக்க கருவிகளின் நாயகனாக கொண்டாடபடுபவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் தொடங்கி வைத்த ஆப்பிள் நிறுவன சாம்ராஜ்யம் இன்னும் பல்லாண்டுக்கு தகவல் தொழில்நுட்ப உலகில் அசைக்க முடியாதது.

மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த ஸ்டீப் ஜாப்ஸின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை கொடுத்தவர் இந்திய ஆன்மீக ஞானி நீம் கரோலி பாபா. 1970களில் ஸ்டீப் ஜாப்ஸ் உச்சகட்ட மனநெருக்கடியில் இருந்தார். தொட்டதெல்லாம் தோல்வி, எதிர்காலம் தெரியாத அளவு நெருக்கடி, திரும்பும் திசையெல்லாம் அவமானம் என அவரின் வாழ்வு இருளில் இருந்தது.

எதிர்காலம் தெரியாத கடும் இருளில் சிக்கியிருந்தவருக்கு மன ஆறுதல் தேவைபட்டது. அதை அமெரிக்க மனநல மருத்துவர்கள் உட்பட யாராலும் கொடுக்க முடியவில்லை. பெரும் பெரும் தொழிலதிபர்களால் யாராலும் தன்முனைப்பு கும்பலாலும் கொடுக்க முடியவில்லை

மேல்நாட்டில் மனநிம்மதியினை ஆன்மீகத்தில் அடையமுடியும் என நம்புவோர் இந்தியாவில் வரும் இடங்கள் இரண்டு. ஒன்று ஹிமாலயம். இன்னொன்று தமிழக திருவண்ணாமலை.

ஸ்டீவ் ஜாப்ஸ் இங்கெல்லாம் சுற்றினார். அன்று அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது. வாழ்வில் வெறுத்து போன ஒரு மேல்நாட்டு இளைஞன் அவ்வளவு தான்.

கடைசியில் அவர் சரணடைந்த இடம் உத்திரகாண்டில் இருக்கும் மகா ஞானி நீம் கரோலி பாபா ஆஸ்ரமம். காஞ்சி எனும் சொல் அங்கு கைஞ்சி என அழைக்கப்படும். உத்திரகாண்ட் கைஞ்சியில் கரோலிபாபா ஆஸ்ரமம் உண்டு.

மகானான அவர் திருவண்ணாமலை ரமணரின் சாயல். அவரை கண்டால் தன் துயரம் தீரும் என சென்றார் ஸ்டீப் ஜாப்ஸ். ஆனால் கரோலி பாபா சில மாதங்களுக்கு முன்பே காலமாகியிருந்தார். ஆனாலும் ஸ்டீவ் ஜாப்ஸ் அங்கு தங்கினார், அங்கு அவர் அமர்ந்த சில நாட்களிலே அவர் உள்ளம் தெளிந்தது, பெரிய தெளிவு பிறந்தது.

அந்த கரோலி பாபாவின் ஒளி ஒரு சக்தியாக தன்னுள் பாய்வதை உணர்ந்தார். பின் மாபெரும் தெளிவு பெற்றவராக, அச்சம் பயம் குழப்பம் நீங்கியவராக அமெரிக்கா திரும்பினார்.

கரோலி பாபாவில் பிரசாதமாக கொடுக்கபட்ட ஆப்பிளை தன்னோடு வைத்திருந்தார். அதையே தன் கம்பெனியின் அதிகார லட்சினை ஆக்கினார். அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் மாபெரும் சக்தியாக வளர்ந்தார்.

இவரின் வழிகாட்டுதலில் முகநூல் அதிபர் மார்க், டிவிட்டரை தொடங்கிய ஜேக் என எல்லோரும் அந்த கைஞ்சி ஆசிரமம் வந்து கரோலி பாபாவின் சமாதியில் பணிந்து பெரும் திருப்பம் கொண்டார்கள்.

முகநூலின் மார்க் 2015ம் ஆண்டு தகவல் ஊடறுப்பு விவகாரத்தில் பெரிதாக சிக்கினார். அவரின் தொழில் வாழ்வில் மோசமான காலகட்டம் அது.

ஆனால் அவர் கரோலி பாபா மடத்துக்கு வந்தார். அதிசயமாக மீண்டார் இன்றுவரை அந்த ஆஸ்ரமத்துக்கு அவர் சாட்சி, இத்தனைக்கும் அவர் யூதர். இந்துமதம் என்பது எல்லா மானுடர்க்குமான தர்மம். அதற்கு சாதி, இனம், மதம் எனும் வேறுபாடே இல்லை.

அதைத்தான் ஆப்பிள் நிறுவனர் வாழ்வு சொல்கின்றது. பிறப்பால் கிறிஸ்தவரான அவர் இந்து மதத்தில் தான் மனநிறைவு அடைந்தார். தெளிவு அடைந்தார், உலகின் சக்திமிக்க மனிதரானார்.

அவரின் வாழ்வு கரோலி பாபாவின் அருளால் மாறிய பின் அமெரிக்க பெண் லோரன் பாவல் என்பவரை திருமணம் செய்தார். அவரும் முழு இந்து. இன்று அந்த லோரன் பாவல் ஜாப்ஸ், கயாவில் கணவனுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு திரிவேணி சங்கத்தில் நீராட பிரக்யாகை வந்திருக்கின்றார்.

அவரின் அலுவல் பெயர் பழைய பெயராக இருந்தாலும் தற்போது இந்துவாக அவர் சூட்டியிருக்கும் பெயர் கமலா. கமலா ஹாரிஸ் தெரிந்த அளவு இந்த இந்து பெண் கமலாவினை யாருக்கும் தெரியாது. ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி மகா கும்பமேளாவுக்கு வந்திருப்பதை தேசம் வரவேற்கின்றது.

ஒரு இந்துவாக, இந்துமதத்தில் அடைக்கலமாகி தெளிவு பெற்றவராக நின்ற ஜாப்ஸின் மனைவி இந்து மனைவியாக தன் கணவனின் கடமை தேடி இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அந்த பரம்பொருள் இன்னும் எல்லா வரங்களையும் பலத்தையும் அவரின் முன் ஜென்ம கர்மபடி கரோலி பாபாவின் ஆசி மூலம் வழங்கட்டும்.

காவி அணிந்து ருத்திராட்ச மாலை அணிந்து  அந்த அம்மையார் சுத்த இந்துவாக வந்தது நெஞ்சை நெகிழவைக்கும் காட்சி. நம்மில் ஒருவராக அந்த மேல்நாட்டு இந்து சகோதரியினை வரவேற்பதில் தேசம் பெருமையும் மகிழ்வும் கொள்கின்றது.

இந்த ஞான தாத்பரியத்தில் கலந்து விட்ட அந்த மகளை நம்மில் ஒருவராக தேசம் வரவேற்று கொண்டிருக்கின்றது.

“மேல் நாட்டு விஞ்ஞானிகளெல்லாம் ஒரு காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த ரிஷிகள், உலக மக்களின் நலம் மக்களின் நல்வாழ்வு அவர்கள் சிரமம் போக்கும் சிந்தனை தவம் என மக்களுக்காக இங்கு தவமிருந்த மகான்களின் மறுபிறப்பு அவர்கள்.

தங்கள் தவபயனாய் இந்த விஞ்ஞான யுகத்தில் அவர்கள் தங்கள் முற்பிறப்பின் தொடர்ச்சியால் பல அரிய சாதனைகளை நிகழ்த்துகின்றார்கள், அதனால் இயல்பால் இந்தியா எனும் யோகியர் பூமியிடம் அவர்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு வருகின்றது. இங்கு ஆச்சரியபட ஏதுமில்லை” என காஞ்சி மகா பெரியவர் சொன்னது முழுக்க சரி என்பது கண்முன் தெரிகின்றது.

நன்றி: பிரம்மரிஷியார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top