Close
ஜனவரி 22, 2025 6:41 காலை

திருப்பதி அன்னதானத்தில் இனி மசால் வடை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பூண்டு, வெங்காயம் சேர்க்கப்படாத மசால் வடையுடன் அன்னபிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தினந்தோறும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதில், வாழை இலையில் சாதம், சாம்பார், ரசம், பொரியல், சட்னி, சர்க்கரை பொங்கல் ஆகியவை பிரசாதமாக பரிமாறப்படுகிறது. எந்தக்காரணம் கொண்டும் பூண்டு, வெங்காயம், அன்னதானத்தில் வழங்கப்படுவதில்லை. இந்த நடைமுறை பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அன்னதானத்துடன் பருப்பு வடை, மசால் வடை வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பொதுவாக பருப்பு வடையும், மசால்வடையும் பூண்டு, வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் திருப்பதியில்  வெங்காயம், பூண்டு இல்லாமல் மசால் வடைகளை தயாரித்து பக்தர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சோதனை முறையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு பூண்டு, வெங்காயம் சேர்க்காத மசால் வடை வழங்கப்பட்டது. இந்த சோதனை முயற்சி பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து பிப்ரவரி 4-ம் தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் பூண்டு, வெங்காயம் சேர்க்காத மசாலா வடையுடன் அன்னபிரசாதம் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top