பிரதமர் மோடி பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை செய்தியாளர்களுடன் பேசும்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசியதாவது:
”நீண்ட நேரம் நரேந்திர மோடியுடன் உரையாடினேன். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருகை தரவுள்ளார். நாங்கள் இந்தியாவுடன் நல்ல உறவுடன் இருக்கின்றோம்” என்று பேசினார்.
பிரதமர் மோடியுன் தொலைபேசியில் பேசியது குறித்து அமெரிக்க அதிபரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். ஒரு நாட்டின் பிரதமர் தான் தங்கியிருக்கும் வெள்ளை மாளிகைக்கு வருகிறார் என்று அமெரிக்க அதிபரே மகிழ்ச்சியுடன் அறிவித்திருப்பது உலக அளவில் உற்றுக்கவனிக்கப்படும் செய்தியாக மாறியுள்ளது.
டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம்… அமெரிக்கா சீனாவுடன் நெருங்கி செல்கிறது என உலக அளவிலான ஊடகங்கள் தெரிவிக்கும் சூழலில் அமெரிக்க அதிபரே இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த அளவு மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நேசிக்கிறாரா? என உலக ஊடகங்கள் எழுதி வருகின்றன.