உள்நாட்டு வியமானங்களில் பயணம் மேற்கொள்வோர் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
இந்தியாவில் மக்கள், அதிக அளவில் உள்நாட்டு பயணங்களை மேற்கொள்கின்றனர். கடந்த 2024-ம் ஆண்டில் உள்நாட்டு விமானங்களில் 16.3 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இது சாதனை அளவாகும்
இதன் மூலம் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் 15.2 கோடியை விட 6 சதவீதம் அதிகமாகும்.
இதன்மூலம் 2024-ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு விமானங்கள் 86.4 சதவீத பயணிகளை சுமந்து சென்றுள்ளன. அதாவது உள்நாட்டு விமானங்களில் சராசரியாக 86.4 சதவீத இருக்கைகள் நிரம்பியுள்ளன.
இந்த வரிசையில் 2-வது இடத்தில் அமெரிக்காவும் (84.1 சதவீதம்), 3-வது இடத்தில் சீனாவும் (83.2 சதவீதம்) உள்ளன. இந்தத் தகவல்கள் சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தில் (டிஜிசிஏ) இருந்து பெறப்பட்டுள்ளன என்று ஐஏடிஏ தெரிவித்துள்ளது.