Close
பிப்ரவரி 23, 2025 10:11 காலை

அங்கன்வாடி பள்ளிகளில் பிரியாணியுடன் பொறிச்ச கோழி?

கேரள பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் பிரியாணியும் பொறிச்ச கோழியும் வழங்க பரிசீலனை நடந்து வருகிறது.

தமிழகத்தை போல் கேரளாவிலும் பள்ளிகள், அங்கன்வாடியில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தை போல் விதவிதமான சாதங்கள் வழங்கப்படுவதில்லை. சுவையும் தமிழகத்தை போல் நன்றாக இருக்காது. அதுவும் அங்கன்வாடியில் அதிகளவில் உப்புமாவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த  உப்புமாவை சாப்பிட்டு குழந்தைகளுக்கு சலிப்பு தட்டி விட்டது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் அங்கன்வாடியில் படிக்கும் ஷங்கு என்ற ஒரு சிறுவன் அங்கன்வாடியில் உப்புமாவிற்கு பதிலாக பிரியாணியும், பொறிச்ச கோழியும் வேண்டும் என மலையாள மொழியில்  பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளான்.

இந்த வீடியோ கேரளா முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பல லட்சம் பார்த்து பள்ளியில் தராவிட்டால் என்ன? நாங்கள் உணவுக்கு பிரியாணியும், பொறிச்ச கோழியும் வாங்கித் தருகிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.

கேரள மாநில அமைச்சர் வீணாஜார்ஜூம் இந்த வீடியோவை பார்த்துள்ளார். அவர் ஷங்கு சிறுவனுக்கு பதில் சொல்லியுள்ளார். அதில் உனது கோரிக்கையினை ஏற்றுக் கொள்கிறோம். விரைவில் உனது கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கிறோம் என பதிலளித்துள்ளார்.

இப்போது அமைச்சர் வீணாஜார்ஜ் பதிலும் கேரளாவில் வைரலாகி வருகிறது. எப்படியோ சிறுவன் ஷங்கு மூலமாக கேரள அங்கன்வாடி மாணவர்கள் விரைவில் பிரியாணியும், பொறிச்ச கோழியும் சாப்பிட உள்ளனர் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகினறனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top