வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் பல ஆண்டுகளை கடந்து, இறப்பதன் மூலமா கவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர் பகத் சிங்.
பல தசாப்தங்கள் கடந்தும் பேசப்படுகிற இந்த மாவீரனை தவிர்த்து விட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது. ஒரே ஒரு ஆங்கிலேய காவல் அதிகாரியின் மரணத்திற்கு, ஐந்து வருடங்கள் காத்திருந்து குரூரமாகப் பழிவாங்க, ஆங்கிலேயரின் சொந்தங்கள் துடித்தது என்றால், ஒட்டுமொத்த நாட்டையே
அடிமையாக்கி எண்ணற்ற மக்களை ஈவிரக்கமின்றி கொன்ற ஆங்கிலேய காலணியாதிக்க வெறியர்களைப் பழி வாங்கினால் என்ன தவறு என்பதை ஒரு தர்க்கரீதியில் யோசிக்கிறபோது, இந்த புள்ளியில் தான் ஆயுதப் போராட்டமும், விடுதலைக்கான போரில் தவிர்க்க முடியாத போர் முறை என்பதை நியாயப்படுத்த வேண்டியுள்ளது.
புரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்கிற பகத் சிங்கின் வரிகளால் அதை ஊர்ஜிதப் படுத்திக்கொள்ளலாம்.
நாட்டின் விடுதலைக்காக, இனத்துக்காக போராடுகிற அந்த மாவீரனின் போர்முறையிலும், அடிப்படை நாதமாக அந்த வரிகள் தான் ஒலித்துக்கொண்டிருந்தன.
If the deaf have to hear, the sound has to be very loud என்கிற அவருடைய வரிகள், நம்மிடையே வாழும் போராளிகளின் செவிகளில் ஒலிக்காமல் இல்லை..,
என்றும் பகத் சிங் அவர்களுக்கு முன்மாதிரியாக முந்திக்கொண்டு வருவார்.பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் இந்திய தேசத்தின் விடுதலைக் குறியீடுகள். அவர்களது நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்.
#இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#