புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய” பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
82 வயதான முன்னாள் ஜனாதிபதிக்கு எலும்பு வரை பரவும் புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக பைடனின் அலுவலகம் தெரிவித்தது. அவர் தற்போது தனது குடும்பத்தினருடன் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். பைடனின் அலுவலக அறிக்கையின்படி, கடந்த வாரம், ஜனாதிபதி ஜோ பைடன் சிறுநீர் அறிகுறிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது என்று கூறியது.
இது குறித்து எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி கூறியதாவது: ஜோ பைடன் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்தேன். அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பைடன் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய தானும் தனது மனைவி மிஷேல் ஒபாமாவும் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்து அவர் குணமடைய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.