Close
நவம்பர் 23, 2024 9:26 காலை

புத்தகத் திருவிழா.. கல்லூரி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

தமிழ்நாடு

புத்தகத் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை  மன்னர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கலை, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகள்

புதுக்கோட்டையில் நடைபெறும் 6-ஆவது  புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் சனிக்கிழமையன்று புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா புதுக்கோட்டை நகர் மன்றத்தில் வருகின்ற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை நடத்துகிறது. இவ்விழாவையொட்டி மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் அ.மணவாளன், எஸ்.டி.பாலகிருஷ்ணன், ம.வீரமுத்து, மு.முத்துகுமார், ஜீவி முன்னிலை வகித்தனர்.

போட்டிகளை வாசகர் பேரவை செயலர் எஸ். விஸ்வநாதன், முத்தமிழ், உஷாநந்தினி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மன்னர் கல்லூரி தேர்வு நெறியாளர் கணேசன், பேராசிரியர் பிச்சைமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பேச்சுப்போட்டியில் முதல் பரிசை கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மாணவி ச.ஜமுனா, இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகளை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் முறையே வி.ஜெயலெட்சுமி, சா.சஸ்ரீனா பிர்தவுஸ், ஆறுதல் பரிசுகளை ஜெ.ஜெ. கல்வியியல் கல்லூரி மாணவி செ.ஜோதி, மதர்தெரசா மருந்தியல் கல்லூரி மாணவி வாணிஸ்ரீ ஆகியோர் பெற்றனர்.

கவிதை மற்றும் குறும்படப் போட்கள் நடுவர் குழுவினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும், சான்றிதழ்களும் புத்தகத் திருவிழா மேடையில் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும் என புத்தகத்திருவிழாஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top