Close
மே 20, 2024 12:57 மணி

கம்பன் பெருவிழா 9 -ஆவது நாள் விழா… போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை

கம்பன் பெருவிழா 9 -ஆம் நாள் விழா

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில்  ஜூலை 14 ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை 48 -ஆம் ஆண்டு கம்பன் விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் (டவுன்ஹால்)  (ஜூலை 22)  மாலையில் நடைபெற்ற கம்பன் பெருவிழாவின் 9 -ஆவது நாளான சனிக்கிழமை  மாலை  5.30 மணிக்கு நடைபெற்ற  பரிசளிப்பு நிகழ்வுக்கு நகராட்சித்தலைவர் திலகவதிசெந்தில் தலைமை வகித்தார்.
கம்பன் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வென்ற  மாணவ, மாணவிகளுக்கு  கம்பன் கழகத்தலைவர் எஸ். ராமச்சந்திரன், நகராட்சித்தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.
புதுக்கோட்டை
கம்பன் விழா போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்த கம்பன் கழகத்தலைவர் எஸ். ராமச்சந்திரன், நகர்மன்றத்தலைவர் திலகவதிசெந்தில்
ஒன்றியக்குழுத்தலைவர்கள் அரிமழம் மேகலாமுத்து, விராலிமலை காமு. மணி, வள்ளியம்மை தங்கமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராம. வயிரவன், ரோட்டரி சங்கத்தலைவர் ராஜாமுகமது, ,பேலஸ்சிட்டி ரோட்டரி தலைவர் கே. பாஸ்கரன், மகாராணி ரோட்டரி சங்கத்தலைவி கருணைச்செல்வி, நகராட்சி உறுப்பினர் ஆர். ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக துணை பொருளாளர் கறு. ராமசாமி வரவேற்றார். முனைவர் ரேவதி செல்லத்துறை நன்றி கூறினார்.
இதையடுத்து இரவு 7 மணியளவில் நடைபெற்ற சந்திப்பு வளையம் நிகழ்வுக்கு, திண்டுக்கல் தொழிலதிபர் க. ரெத்தினம் தலைமை வகித்து பேசினார்.
புதுக்கோட்டை
கம்பன் விழாவில் பேசுகிறார், திண்டுக்கல் தொழிலதிபர் க. ரெத்தினம்
மூத்த வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரைதிவியநாதன், காங்கிரஸ்  முன்னாள் எம்எல்ஏ- ராமசுப்புராம், சுப்புராமையர் பள்ளி நிர்வாகி விஜயரவி பல்லவராயர், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஏஎம்எஸ். இப்ராஹிம்பாபு, மகாத்மா காந்தி பேரவை நிறுவனத்தலைவர் வைர.ந. தினகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் துரை. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவாரூர் புலவர் ரெ. சண்முகவடிவேல்  நடுவராக இருந்து சந்திக்காதோர் சந்திப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற சந்திப்பு வளையம் நிகழ்வில், பரதன்-கும்பகர்ணன், சூர்ப்பனகை-வாலி, கைகேயி,-மண்டோதரி ஆகியோர் சந்தித்தால் எப்படி இருக்கும் என்பது குறித்து,  திருப்பத்தூர்  ம. சிதம்பரம், காரைக்குடி மு. பழனியப்பன், மயிலாடுதுறை பா. முத்துலட்சுமி, சென்னை சங்கீதா பழனி, சேலம் உமா தேவராஜன், சேலம் தேவி குணசேகரன் ஆகியோர் உரையாற்றினார்.
முன்னதாக கம்பன் கழகச்செயலர் ரா. சம்பத்குமார் வரவேற்றார். ரயில் பயணிகள் சங்கத்தலைவர் ஆர். சிவகுமார் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கம்பன் கழகத்தலைவர் ச. ராமச்சந்திரன், செயலர் ரா. சம்பத்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top