புதுக்கோட்டை: புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் -அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா இலக்கிய விருதுகள் பெற ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம்- அறமனச்செம்மல் சீனு.சின்னப்பா மொத்தம் ரூ. 1 லட்சத்துக்கான இலக்கிய விருதுகள்-2025 பெற பின் வரும் பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.
பிரிவுகள் :மரபுக் கவிதை ,புதுக்கவிதை , ஹைக்கூ கவிதை .
சிறுகதை +நாவல் , சிறார் இலக்கியம்.
கட்டுரை : சமூகம், வரலாறு, கலை, இலக்கியம்.
மொழிபெயர்ப்பு நூல், சிறந்த சிற்றிதழ்.
நூலாசிரியர், பதிப்பாளர் கவனத்திற்கு ..
நூல்கள் 2024 -ஆம் ஆண்டு வெளிவந்ததாக இருக்க வேண்டும்.
நூல்கள் முதல் பதிப்பாக இருக்க வேண்டும்.
நூல்களில் மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும்.
நூல்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 5.4.2025.
விருது முடிவுகள் வெளியிடும் நாள் 20.4.2025.
விருது வழங்கும் விழா புதுக்கோட்டையில் 1 மே 2025 வியாழன் அன்று நடைபெறும். தேர்வு பெறாத நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.
நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
சீனு. சின்னப்பா இலக்கிய விருது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி திருக்கோகர்ணம், புதுக்கோட்டை, 622 002. தொடர்புக்கு : 9443126025.