Close
மே 3, 2024 10:01 மணி

‘அறமனச் செம்மல்’ சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்: புதுகை தமிழ்ச்சங்கம் அறிவிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் சீனுசின்னப்பா விருதுகள் அறிவிப்பு

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் உலக அளவிலான ‘அறமனச் செம்மல்’ சீனு சின்னப்பா இலக்கிய விருது(2024) பெறும் ஆளுமைகள்  பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில்  22.4.2024  அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சீனு சின்னப்பா அவர்களின் மகன் பேக்கரி மஹராஜ் உரிமையாளர் அருண் சின்னப்பா  புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் உலக அளவிலான முதலாம் ஆண்டு இலக்கிய விருது பெறுவோரின் பட்டியலை வெளியிட்டார். அதை கவிஞர் நா. முத்துநிலவன் பெற்றுக் கொண்டார்.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் உலக அளவிலான முதலாம் ஆண்டு இலக்கிய விருதுகளுக்குத் தேர்வான 10 பிரிவுகளின் படைப்பாளிகள் விவரம்:

நாவல் – குளம்படி– எழுத்தாளர் வெற்றிச்செல்வன் இராசேந்திரன்.

மரபுக்கவிதை- வேலுநாச்சியார் காவியம்– புதுகை வெற்றிவேலன்

ஹைக்கூ- பொட்டலம்– கவிஞர் நயினார்.

கட்டுரை- தண்டனைக் களமாகும் பெண்ணுடல்– ஊடகவியலாளர் சுகிதா சாரங்கராஜ்.

தன்னம்பிக்கை நூல்- ஆட்சித்தலைவிகள்– எழுத்தாளர் ஜி.வி. ரமேஷ்குமார்.

சிறுகதை- கரியோடன்– எழுத்தாளர் சாரோன்.

புதுக்கவிதை- என் பெயரெழுதிய அரிசி– எழுத்தாளர் கண்மணி ராசா.

சிறுவர் இலக்கியம்- பாப்பாவுக்கு பறவைப்பாட்டு- எழுத்தாளர் சாந்தி சந்திரசேகர்.

கட்டுரை- மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்– எழுத்தாளர் விமர்சகர் ந. முருகேசபாண்டியன்.

சிறந்த சிற்றிதழ்- புன்னகை– க. அம்சப்பிரியா, ச. ரமேஷ்குமார் ஆகியோர் விருது பெறுகின்றனர்.

புதுக்கோட்டை
புதுகை தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய விருதுகள் பெறுவோர்

இது குறித்து புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி  கூறியது: புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் உலக அளவிலான முதலாம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் விழா வரும்  30.4.2024 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெறும்.

ஒவ்வொரு விருதும் பாராட்டுச் சான்றிதழ், தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 10 பிரிவுகளுக்கு மொத்தம் ரூ. 1  லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின்   செயலர் கவிஞர் மகா சுந்தர், வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன், கவிமுருகபாரதி, கவிஞர்கள் ராசி.பன்னீர்செல்வம், கீதா, கல்வியாளர்கள் த. ரவிச்சந்திரன், திருப்பதி, தொழிலபதிபர் எஸ்விஎஸ். ஜெயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top