Close
நவம்பர் 22, 2024 10:01 காலை

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… ஆன் ஃபிராங் – நாட்குறிப்பு

புத்தகவிமர்சனம்

அலமாரியிலிருந்து புத்தகம் ஆன் பிராங்க்

ஆன்ஃபிராங்-நாட்குறிப்பு… ஒரு பள்ளிப் பருவத்து பெண்ணின் உண்மையான நாட்குறிப்பாகும், அது அவளது 13 – ஆவது பிறந்த நாளில் (12 ஜூன் 1942) தொடங்குகிறது.

இரண்டாம்உலகப் போரின் போது ஐரோப்பாவில் ஹிட்லர் மற்றும் நாஜிக்கட்சி யூதர்களை, மூர்க்கமாக நடத்தியதன் விளைவாக, ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரத்தில் வசித்த அவளது குடும்பம் தலைமறைவானது பற்றி பேசுகிறது. அவர்கள் ஆம்ஸ்டர்டாம் நகருக்கு தப்பித்து அங்கு மற்ற யூதர்களுடன் தலைமறைவாகி விடுகிறார்கள். 1944 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாளில் நாட்குறிப்பு திடீரென முடிகிறது. இதற்கு இடையில் என்ன நடந்தது என்பதை டைரி பேசுகிறது.

இந்த ஆவணத்தில் பல முக்கியமான செய்திகள் உள்ளன, அனைத்து மக்களுக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு, மக்கள் வெவ்வேறு மதம் அல்லது இனமாக இருப்பதால், அவர்கள் வித்தியாசமாக நடத்தப்பட வேண்டும் என்று அர்த்த மல்ல என்பதை நமக்குக் காட்டுகிறது. போரின் போது யூத மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரம் நாம் நினைத்துப் பார்க்காத அளவிற்கு இருந்ததை இந்த நாட்குறிப்பு நமக்குக் காட்டுகிறது.

ஒளிந்து பதுங்கி இருந்தவர்கள் ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக் கப்பட்டு தண்டிக்கப்பட்டதை நம் கண்முன் கொண்டு வருகிறது. நாஜிக்கள் ஐரோப்பாவின் அனைத்து யூதர்களை யும் கொல்ல முயன்ற நேரத்தில், ஒரு யூதராக மறைந்திருந்து எப்படியெல்லாம் சித்ரவதையை அனுபவித்தார்கள் என்பது பற்றிய தெளிவான திகிலூட்டும் விளக்கமான விவரணங்கள் நாட்குறிப்பில் உள்ளன. வாசிக்கையில் நாம் வாழும் காலத்தில் நடந்தேறிய இனவெறி தாக்குதலும், மர்மங்கள் நிறைந்த மனிதப் புதை குழிகளும் நம் மனக்கண் முன் வந்து போகின்றன.

அவளும் அவளுடைய குடும்பமும் ஒரு மோசமான சூழ்நிலை யில் இருந்தாலும், ஆன் ஃபிராங் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கிறாள். மற்றவர்களை பற்றி எழுதுவதையும் விவரிப்பதையும் விரும்பி செய்திருக்கிறாள், அவள் வாயாடி யாகவும் , அனைவரையும் தன் வசப்படுத்துபவளாகவும் இருந்திருக்கிறாள் , சில நேரங்களில் சுயநலவாதி யாகவும் இருந்திருக்கிறாள். அவள் ஒரு வழக்கமான சுட்டிப் பெண் ணாக இருந்திருக்கிறாள்.

அவளுடைய தாய் மற்றும் அவளைச் சுற்றியுள்ள மற்ற பெரியவர்களுக்கு வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை அவள் எப்போதும் புரிந்து கொள்ளாதவளாகவும் இருந்திருக் கிறாள். அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை, பகிர்ந்து கொண்டவர்கள் குறித்து அவள் கருத்து தெரிவித்திருக்கிறாள்.

அவளின் இந்த செய்கை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், ஒரு சவாலான சூழலில் எப்படி மறு வினையாட்டுவார்கள் என்பதை காட்டுகிறது. அந்த சூழலில் அமைதியாக இருந்து அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதில்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஐரோப்பாவில் நாஜிக்கள் யூதர்கள் மீது நடத்திய கோரத் தாண்டவத்தில் கருகிப்போன அழகிய மலர்களில் ஒரு சிறு மலர்தான் ஆன் ஃபிராங். அவள் ஒரு இளம் பெண் என்றாலும் அவளது முதிர்ச்சியடைந்த குறிப்புகளை கொண்ட துல்லியமான பதிவு இது. அவளது நாட்குறிப்பு போலி என்று கூறுபவர்களும் உண்டு.
வரலாற்றில் எந்வொரு அரிதான நிகழ்ச்சியும், மானுட பேரழிவில் அதனை அனுபவித்தவர்கள் இடமிருந்து நேரடியாக வரும் பொழுது மிகப்பெரிய நம்பகத்தன்மை, வரவேற்பை பெறும். மாறாக முரண் நிறைந்த கருத்துகளும் வரும். They believe it’s a fake because they want it to be a fake. வரலாற்று நிகழ்வுகள், போர் குறித்த ஆவணங்கள் – இவற்றை விரும்பி வாசிப்பவர்கள் இந்த நாட்குறிப்பை வாசிக்கலாம்.

விமர்சனம்: சண்.சங்கர்-லண்டன்-இங்கிலாந்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top