Close
ஏப்ரல் 4, 2025 11:51 காலை

அலமாரியிலிருந்து… ஆல்பர் காம்யு… நாவல்கள்..

அலமாரியிலிருந்து

அலமாரியிலிருந்து புத்தகம்

அலமாரியிலிருந்து  புத்தகம்… ஆல்பர் காம்யு.. எழுதிய நாவல்கள்.

ஆல்பர்ட் காம்யு உண்மையில் மனசாட்சி உள்ள ஒரு மனிதராகவே இருந்திருக்கிறார், அவரிடமிருந்து நமக்கு நிறைய தேவைப்பட்டது. அவரது எழுத்துக்கள் உண்மையில் வித்தியாசமான முறையில் ஊக்கமளிக்கின்ற வகையில் இருந்தன. மனிதனின் மதிப்பை உயர்த்திக்காட்டுவதற்கு பதிலாக, அவனது இருப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பேசியது.

மனிதனால் ஒருபோதும் அவன் வாழ்வின் அர்த்தத்தை அடைய முடியாத வகையில் அதில் அர்த்தம் பொதிந்து இருப்பதையும், நாம் புரிந்து கொள்ளாத இயலாதபடி , ஒருபோதும் நம்மைப் புரிந்து கொள்ளாத உலகில் வாழ்கிறோம் என்பதையும் உணர்த்தியவை அவரது படைப்புகள்.

கிட்டத்தட்ட அவரது அனைத்து புத்தகங்களையும் நான் விரும்புகிறேன், அவரது படைப்பில் வீழ்ச்சி மிகவும் நன்றாக எழுதப்பட்டதாக நான் நம்புகிறேன். ஆனால் அந்நியன் சிறந்ததாக கருதுகிறேன். காரணம், நான் முதன் முதலில் காம்யுவை படித்ததும், Philosophy of absurdity என்கிற அபத்தத்தின் தத்துவம் தொடர்பான அனைத்தையும் அந்நியன் படைப்பின் மூலம் உணர்ந்தேன். அது உண்மையில் எனக்குள்ளும் எதிரொலித்தது.

காம்யு நிறைய கருத்துக்கள், தத்துவங்கள், உணர்வுகள் ஆகியவற்றை மிகத் தெளிவாகவும், கட்டாயப்படுத்தப்படாத தாகவும், தனிப்பட்ட விதத்திலும் ஆராய்ந்து, நமக்குள் இருக்கும் நம் அந்நியனை நாம் பார்க்கும் அளவிற்கு ஆராய்கிறார்.

அந்நியன் மிகவும் சுவாரஸ்யமான புத்தகம். ஒரு வகையில், நம் ஒவ்வொருவரையும் பிரதிபலிக்கிறது என்று சொல்லலாம். இந்த பிரதிபலிப்பு, படைப்பின் முக்கிய கதாபாத்திரமான கதையின் நாயகனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரேஞ்சர் என்பது கண்டிப்பான கட்டமைக்கப்பட்ட சமூகங்களுக்கு இடையே உள்ள தனிமனித சுதந்திரத்தைப் பற்றியும். வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட உணர்ச்சிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் படைப்பு.

இந்த படைப்பின் கதாநாயகன் மூலம் ஒரு தனிநபரின் அகநிலை மற்றும் புறநிலை கூடவே அவனது உலகின் சாத்தியமான எதிர்வினைகள் எல்லாவற்றையும் நமக்கு சற்று சிக்கலான நடையில் சொல்லி செல்கிறது. ஒருமுறை வாசித்தவுடன் எளிதாக புரியும் படைப்பல்ல இது.

நாம் அனைவரும் நம்மைப் பற்றி கவலைப்படுகிறோம், சில சமயங்களில், நாமும் மற்றவர்களைப் புறக்கணிக்கிறோம்.
நாம் நம் வாழ்வில் மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகி, நம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்து செயல்படுகிறோம்.
அந்நியன் அந்த மனப்பான்மையின் அதிக அளவைக் நமக்கு கோடிட்டு காட்டுகிறது. அப்படிப்படட மனநிலையில், வாழ்க்கையில் நாம் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதால், நம்மை மையமாகக் கொண்ட வாழ்க்கையை நாம் உண்மையிலேயே அப்படியாக வாழ முடியாது என்பதையும் விவரித்து காட்டுகிறது.

மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், மற்றவர்களைப் பற்றி சிந்திக்காமல், மற்றவர்களின் மீது அக்கறையின்றி நாம் உண்மையிலேயே சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியாது.
காதல், பக்தி, அன்பு, நட்பு, பரிவு, விருப்பம், பாசம் என்ற பல பரிமாணங்களை உள்ளடக்கிய சொல்லாக ‘நேசம்’என்ற சொல்லை காம்யு கையாள்கிறார். “நேசிக்காமல் இருப்பது என்பது ஒரு துரதிர்ஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிர்ஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம்” என்று 1950-ல் எழுதிய ஆல்பெர் காம்யு -வை வாசியுங்கள்.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top