Close
ஏப்ரல் 4, 2025 12:18 காலை

அறிஞர் அண்ணா தனது இறுதி நாளில் வாசித்த புத்தகம்…

இலக்கியம்

பேரறிஞர் அண்ணா படித்த புத்தகம்

அறிஞர் அண்ணா இறக்கும் தருவாயில் கடைசியாக வாசித்த புத்தகம் மேரி கொரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன் என்கிறார்கள்.

“மேரி கரோலியின் ‘த மாஸ்டர் கிறிஸ்டியன்‘ என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நாளைக்குள் படித்து முடித்துவிடுவேன். பிறகு நான் இறந்தாலும் கவலையில்லை. அறுவை  சிகிச்சையை நாளை மறுநாள் வைத்துக் கொள்ளலாமா?” என்று மருத்துவரிடம் கேட்ட அறிஞர்களின்
அறிஞரான அண்ணாவை மரணம் இரக்கமின்றி அழைத்துக்கொண்டது.

அபூர்வமான மனிதரென்றாலும், ஆற்றல்மிக்க தலைவரென் றாலும் மரணம் மனம் இரங்கிவிடுமா என்ன? மதம் மக்களை ஒன்று சேர்க்கிறது என்றால் அதற்கு மறுபக்கமும் உண்டு, கண்டிப்பாக அது மக்களை பிரிக்கவும் செய்யும். ஒருவரோடொருவர் மோதவும் வைக்கும்.

ஏனென்றால் பாரம்பரியங்களும் அமைப்புகளும் ஒவ்வொரு மதத்துக்கும் வேறு வேறானவை. கிறிஸ்த்துவ மதத்தின் சீர்கேடுகளை சிறுவனாக ஏசு வந்து, சாடுவதாக அமைக்கப் படட புதினம். வாசித்ததில் அண்ணா எதை உணர்ந்தார், எதை ஏற்றுக்கொண்டார், எதை மறுத்தார் என்பது அந்த அறிஞருக் கே வெளிச்சம்.

>>>>இங்கிலாந்திலிருந்து… சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top