Close
நவம்பர் 22, 2024 2:27 காலை

புதுக்கோட்டை 47-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா இன்று தொடக்கம்

புதுக்கோட்டை கம்பன் கழகம்

புதுக்கோட்டை கம்பன் கழக 47 வது ஆண்டு விழா தொடக்கம்

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில்  நகர்மன்றத்தில் 47 ஆவது கம்பன் பெருவிழா  வெள்ளிக்கிழமை 15.7.2022  தொடங்கி வரும் 24.7.2022 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

15.7.2022 வெள்ளிக்கிழமை: மாலை 5.30 மணிக்கு நடைபெறும்  தொடக்க விழாவுக்கு தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் ஆர்.ஆர். கோபால்ஜி தலைமை வகிக்கிறார். தொடர்ந்து  ‘கம்பனின் காலப் பதிவுகள்’ என்ற தலைப்பில் சென்னை பாரதி பாசறையின் தலைவர் முனைவர்  மா.கி. ரமணன்  சிறப்புரையாற்றுகிறார்..

16.7.2022 சனிக்கிழமை: மாலை 5.30 மணிக்கு எஸ்.ஏ. மதுமிதாவின் “கம்ப நாட்டியம்’ நடைபெறுகிறது.தொடர்ந்து 7 மணிக்கு நடை பெறும் மகளிர் அரங்குக்கு திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா ஆர் தொண்டைமான் தலைமை வகிக்கிறார். முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

17.7.2022 ஞாயிற்றுக்கிழமை:  மாலை 5.30 மணிக்கு சௌமியா குழுவினரின் தமிழிசை(கம்பனிசை) நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் கவியரங்கம் நிகழ்ச்சிக்கு மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தலைமை வகிக்கிறார். முன்னாள் எம்எல்ஏ இரா.சு. கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம்  நடைபெறுகிறது.

18.7.2022 திங்கள்கிழமை: மாலை 5.30 மணிக்கு நடைபெறும் உரைக் களத்தில் எழுந்தாளர் நா. முத்துநிலவன், த. சரவணச்செல்வன், ஜோதி ஆகியோர் பேசுகின்றனர்.

இரவு 7 மணிக்கு திருச்சி எம்பி. திருநாவுக்கரசர் தலைமையில்  வழக்காடு மன்றம் நடைபெறுகிறது. இதில், சொல் வேந்தர் சுகிசிவம் நடுவராக இருந்து தீர்ப்பளிக்கிறார். இன்றை பெண்ணிற்கு கம்பன் நியாயம் வழங்கவில்லை என்ற தலைப்பில் புதுகை ச. பாரதி வழக்கு தொடுத்து பேசுகிறார். இதை மறுத்து  ராஜபாளையம் கவிதாஜவஹர் பேசுகிறார்.

19.7.2022 செவ்வாய்க்கிழமை: மாலை 5.30 மணிக்கு நடைபெறும் நடன அரங்கில் கோவை பாலாம்பிகாவின் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது . தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் எம்எல்ஏ தலைமையில் உரையரங்கம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முன்னாள் சபாநாயகரும் புதுச்சேரி கம்பன் கழக செயலருமான வே.பொ. சிவக்கொழுந்து பங்கேற்கிறார்.

மேலும் கம்பன் கவிச்சித்திரம்  என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மரபின் மைந்தன் முத்தையா  ஆகியோர் பேசுகின்றனர்.

20.7.2022 புதன்கிழமை: மாலை 5.30 மணியளவில் நடைபெறும் தேனிசை அரங்கில் சிதம்பரம் வெ. சுஜிதா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு  சுற்றுச்சூழல் துறை- விளையாட்டுத்துறை  அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் நடைபெறும் எழிலுரை நிகழ்வில் “கம்பனின் சொல் நயம்’ என்ற தலைப்பில் ஜெயராஜமூர்த்தி பேசுகிறார். இதையடுத்து இரவு 7 மணியளவில் நடைபெறும் நற்றமிழ் முற்றம் நிகழ்வில், தஞ்சை இரா. கலியபெருமாள், தேவகோட்டை ந. சீனிவாசன், சென்னை அ. ரேணுகாதேவி ஆகியோர் பேசுகின்றனர்.

21.7.2022 வியாழக்கிழமை: மாலை 5.30 மணியளவில் கவிஞர் ரமாராமநாதன் தலைமையில்  நடைபெறும் கவிதைச் சோலை நிகழ்வில் கம்பனில் ஒன்றே ஒன்று தலைப்பில் கவிஞர்கள் ராசிபன்னீர்செல்வம், டாக்டர் இந்திராணி, புதுகைபுதல்வன், ரேவதி, ஸ்டாலின், மதியழகன், பீர்முகமது, கீதா, காசாவயல்கண்ணன், கீதாஞ்சலிமஞ்சன், நேசன் மகதி, சாமிகிரிஸ், லட்சுமி மனோகர், மைதிலிகஸ்தூரி ரங்கன், கவிபாலா ஆகியோ கவிதை வாசிக்கின்றனர்.

இதையடுத்து மாலை7.30 மணியளவில் காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சொ. சுப்பையா தலைமையில் நடைபெறும் கனல் உரை நிகழ்வில், ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர் பாரதிகிருஷ்ணகுமார் முதல் நூலும் முதன்மை நூலும் என்ற தலைப்பில் பேசுகிறார்.

22.7.2022 வெள்ளிக்கிழமை: மாலை 5.30 மணிக்கு பாரதி கல்லூரிகளின் மேலாண்மை இயக்குநர் குரு. தனசேகரன் தலைமையில் நடைபெறும் இளையோர் அரங்கில் மதுரை முனைவர் ரேவதிசுப்புலட்சுமி தலைமையில்  வழக்காடு மன்றம் நடைபெறுகிறது. இதையடுத்து மாலை  7 மணியளவில்  சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நிர்வாகி ஏ. ரவிச்சந்திரன் தலைமையில், கம்பன் கழக துணைத்தலைவர் அருண்சின்னப்பா வரவேற்புரையுடன் நடைபெறும் ஐயம் தெளிவு அரங்கில் தென்காசி ராமச்சந்திரன் நடுவராகக் கொண்ட வழக்காடு மன்றத்தில்  தருமபுரி அறிவொளி, நாகர்கோவில் ஜெயகுமார், திருச்சி மனோன்மணி ஆகியோர் பேசுகின்றனர்.

23.7.2022 சனிக்கிழமை: மாலை 5.30 மணிக்கு இளையமன்னர் முன்னாள் எம்எல்ஏ வீ.ஆர்.கார்த்திக்தொண்டைமான் தலைமையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், புதுக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திலகவதிசெந்தில் பங்கேற்று பரிசளிக்கிறார்.

இதையடுத்து இரவு 7 மணிக்கு  பல்பணி அரங்கம் நடைபெறுகிறது.இதில்  கம்பன் மாமணி, இலக்கிய மாமணி,  கம்பன் பணி வள்ளல் விருதுகள் வழங்கப்படுகின்றன. உச்ச நீதி மன்ற நீதியரசர் வெ. ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து விருதுகளை வழங்குகிறார். தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார் சிறப்புரையாற்றுகிறார்.

 24.7.2022 ஞாயிற்றுக்கிழமை:  மாலை 5.30 மணிக்கு  கம்பன் கழகத்தலைவர் எஸ். ராமச்சந்திரன் வரவேற்புரையுடன் தொடங்கும் நிறைவு விழாவுக்கு  மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமை வகிக்கிறார்.  புதுச்சேரி ஆளுநர் தமிழிசைசௌந்தரராஜன் நிறைவு விழா சிறப்புரை ஆற்றுகிறார். இரவு 8 மணிக்கு பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் நடுவராகப் பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

 ஏற்பாடுகளை கம்பன் கழக தலைவர் ச. ராமச்சந்திரன், செயலர் ரா.சம்பத்குமார் தலைமயிலான விழாக்குழுவினர் செய்துள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top