Close
ஏப்ரல் 24, 2024 3:15 மணி

எழுத்தாளர் சூரிய தீபன் என்னும் பா.ஜெயப்பிரகாசம் காலமானார்

தமிழ்நாடு

மறைந்த எழுத்தாளர் சூரிய தீபன் என்னும் பா.ஜெயப்பிரகாசம்

எழுத்தாளர் சூரிய தீபன் என்னும் பா.ஜெயப்பிரகாசம் (23.10.2022) காலமானார்.

1965 -களில் மதுரைக் கல்லூரியில் மாணவராய் பயிலும் போது இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர்.முன்னாள் அமைச்சர் காளிமுத்து,நா .காமராசன், மு. மேத்தா போன்ற நண்பர்களோடு மொழி போராட்டத்தில் முன் நின்றவர்களில் ஒருவர்.

பின்னாளில் கலைஞர் அவர்களின் அரசு,மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கிய மக்கள் தொடர்பு அதிகாரியாக அரசுப் பணியில் இணைந்தவர் .
மார்க்சிய-லெனினிய இயக்கங்களோடு தொடர்பு கொண்டு தமிழ்நாடு அமைப்புக்குழு என்று அன்று செயல்பட்ட இ.பொ.க ( மா.லெ) அமைப்போடு இணைந்து நின்றவர்.

1980- களில் மன ஓசை என்னும் தலைசிறந்த இதழ் தமிழ்நாட்டில் வெளி வந்ததில் முக்கிய பங்காற்றியவர். மனஓசையில் பல்வேறு ஆளுமைகளை இணைத்து புதிய, புதிய கருத்துகளை எண்பதுகளில் தமிழகத்தில் பதிவு செய்த வரலாறு கொண்டவர்.
பின்னாளில், தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சியின் உறவிலிருந்து விலகி நின்றாலும் கள செயல்பாடுகளில் இயங்கி வந்தவர். தமிழீழத்திற்கு சென்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களோடு இலக்கியம் மற்றும் பல்வேறு செய்திகள் குறித்து பேசி வந்தவர்களில் இவரும் ஒருவர்.

மிக மென்மையாகப் பேசக்கூடிய இயல்பு கொண்டவர்.கி ராஜநாராயணனை அடியொற்றி கரிசல் காட்டின் வாழ்வை இலக்கியமாகப் பதிவு செய்வதில் முன் நின்றவர்.தன்னுடைய இறுதிக் காலத்தில் சொந்த ஊரான விளாத்திகுளத்தில் வாழ்வை நிறைவு செய்துள்ளார்.

அன்புத் தோழர் ஜெயப்பிரகாசம் என்னும் சூரியதீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக தற்சார்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கி.வே. பொன்னையன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top