புதுக்கோட்டை வடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், ஆதிகாலத்து அலங்கார மாளிகை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் வாராப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் பழனியப்பன் அனைவரையும் வரவேற்றார்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் 217 நபர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர் அவர்களில் கண் புரை சிகிச்சைக்காக 80 பேர் தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நிகழ்வில், புதுக்கோட்டை ஆதிகாலத்து அலங்கார மாளிகை உரிமையாளர் அருண்,ரோட்டரி சங்க நிர்வாகிஆரோக்கியசாமி, முன்னாள் தலைவர்கள், அருணாசலம் உள்ளிட்ட உறுப்பினர்கள், புதுக்கோட்டை ஆதிகாலத்து அலங்கார மாளிகை பணியாளர்கள், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பி. விவேகானந்தன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.