டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கான சுமார் 21 ஆயிரம் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணிகள் செய்து வருகின்றனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இப்பணிகளை செவ்வனே செய்ய 1158 பெரிய புகை அடிப்பான்கள், 7,213 சிறிய புகை அடிப்பான்கள், 7,634 மிக சிறிய புகை அடிப்பான்கள் மற்றும் டெமிபாஸ், பைரித்திரம், டெக்னிகல் மாலத்தியான் போன்ற ஒழிப்பு மருந்துகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழகமெங்கும் தினமும் காய்ச்சல் கண்காணிப்பு பணி 2,800 அரசு மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவ மனைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு பெறப்படும் காய்ச்சல் நிலவரத்தை கொண்டு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் தலைமையில் வட்டார அளவிலான துரித செயல்பாட்டுக் குழுக்கள் காய்ச்சல் ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்று உடனடியாக நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்கிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, நடமாடும் மருத்துவ குழுக்கள் காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கே சென்று உடனடி சிகிச்சை அளித்து வருகின்றன.
இதுவரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம்கள் 10.3.2023-லிருந்து இன்று வரை 80 ஆயிரத்து 197 முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 13 லட்சத்து 68 ஆயிரத்து 601 பயனாளிகள் பயன்பெற்று 14,197 பேருக்கும் காய்ச்சல் கண்டறியப்பட்டு குணமடைந்து நலமுடன் உள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் தற்காலிக பணியாளர்கள் ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் வீடு வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொசு உற்பத்தியை தடுக்க தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளது. இப்பணிகள் அனைத்து துறை அலுவலர்களாலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தினந்தோறும் கொசு உற்பத்தியாகும் இடங்கள் பற்றி ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கண்டறிந்து பூச்சியியல் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனை களிலும் 24 x 7 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ரத்த அணுக்கள், பரிசோதனை கருவிகள், மருந்துகள், ரத்தக்கூறுகள் ஆகியவை போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட் டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.