Close
நவம்பர் 22, 2024 1:17 காலை

புதுக்கோட்டை மன நல சிகிச்சை மூலம் குணமடைந்தவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மன நல  மையத்தில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தவர்,  மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மாவட்ட மனநல மையத்தில், சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில்  (23.06.2022) அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

புதுக்கோட்டையில் டாக்டர்.முத்துலெட்சுமி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனை வளாகம் உள்ளது .இவ்வளாகத்தில் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சுற்றி திரியும் நபர்களை பார்க்கும்  யாராவது ஒரு சமூக ஆர்வலர்கள் அல்லது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்  சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர். அனுமதிக்கப்பட்ட நபர்களுக்குஒருங்கிணைந்த மனநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவருக்கு தேவையான உணவு, உடை, குளியல் சோப் உள்ளிட்ட தன் தேவை பொருட்கள் கொடுக்கப்பட்டு தங்குவதற்க்கு பாதுக்காப்பான இடமும் வழங்கப்படுகிறது.

மாவட்ட மனநல சிகிச்சை மையத்தில்  மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் தலைமையில், மனநல மருத்துவர் முத்தமிழ் செல்வி, மனநல பணியாளர்கள் முருகானந்தம், சதீஷ்கண்ணா, அஞ்சலிதேவி, பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர் சிலம்பரசி மற்று செவிலியர்கள்   ஒருங்கிணைந்து  சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். இதன் மூலம் பலரும் மன நோயிலிருந்து  குணமடைந்த பின்னர், அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

அப்போது  குணமடைந்து செல்லும் நபரின் உறவினர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில்   வீட்டிற்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை யில் தொடர் சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறது.

இதுவரை புதுக்கோட்டை மாவட்ட மனநல சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்ட 150 க்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இப்பணியை புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வருவாய்த்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை யினர் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் மாவட்ட மனநல மையத்தில், சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  முன்னிலையில் (23.06.2022) அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட மனநல மருத்துவர் ரெ.கார்த்திக்தெய்வநாயகம், ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top