Close
மே 19, 2024 3:07 காலை

குழிபிறையில் இலவச கண் மருத்துவ முகாம்

புதுக்கோட்டை

குழிபிறை ஊராட்சியில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாம்

குழிபிறையில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே குழிபிறையில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், குழிபிறை ஊராட்சி மன்றம், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்  வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அசோகன் தலைமை வகித்தார். குழிபிறை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.அழகப்பன் வரவேற்புரை வழங்கினார்.

மண்டல பசுமை அறநிலையத்தலைவர்  ராமசாமி, குழிபிறை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாச்சம்மை, சங்க ஆலோசகர் கண.மோகன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்க பொருளாளர் ஆர்.சங்கர் நன்றி கூறினார். சிறப்பு விருந்தினராக மேனாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் புருஷோத்தமன் கலந்து கொண்டார்.

இதில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இந்நிகழ்வில் குழிபிறை ஊராட்சி மன்ற செயலாளர் ஆறுமுகம், முகாம் ஒருங்கிணைப்பாளர், A.சந்தனகுமார் திட்ட ஒருங்கிணைப்பாளர் கோமதிசங்கர், ரோட்டரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top