Close
செப்டம்பர் 20, 2024 1:32 காலை

அமெரிக்க உடற்கல்வி ஆசிரியர் கண்டுபிடித்த விளையாட்டு கூடைப்பந்து..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

கூடைப்பந்து விளையாட்டு

ஜேம்ஸ் நிஸ்மித் என்ற அமெரிக்க உடற்கல்வி ஆசிரியர் கண்டுபிடித்த விளையாட்டு தான் கூடைப்பந்து. பனிக் காலத்தில் மாணவர்கள் வெளியே சென்று விளையாட முடியவில்லை என்பதால், வளாகத்தின் உள்ளே விளையா டலாம் என்று ஆரம்பித்த இந்த விளையாட்டு மாணவர்களுக்கு பிடித்துப்போனது.

ஜேம்ஸ் நிஸ்மித் பணியாற்றிய ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியில் 1891 -ஆம் ஆண்டு டிசம்பர் 21 -ஆம் தேதி முதன் முதலில் விளையாடப்பட்ட கூடைப்பந்து, இன்று உலக முழுவதும் பரவலாக விளையாடப்படுகிறது.

வீட்டிற்கு புதிய வரவாக கூடைப்பந்து வளையமும், தூணும் வந்திருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பனிக்காலம் வருவதற்கு முன் விளையாடலாம்.

கூடைப்பந்து எனது விருப்பமான விளையாட்டு. வளையத் துக்குள் பந்தை போடுவது என்பது எனக்கு சிரமமான ஒன்று. பள்ளிப் பருவம் தொடங்கி கல்லூரி காலம் வரை விளையாடி யிருக்கிறேன்.

பல பந்தயங்களில் கலந்திருக்கிறேன், பல அணிகளோடு மோதி இருக்கிறேன். எங்கள் அணி ஒரு முறை கூட வென்ற தில்லை. கூட்டு முயற்சியில் விளையாடப்படுகிற விளையாட்டில், அதற்கு நான் மட்டுமே பொறுப்பாக முடியாது. எப்படி வெற்றியை தனதாக கொண்டாட முடியாதோ அதுபோலவே தோல்விக்கு தனி மனிதன் பொறுப்பு ஏற்க இயலாது. பண்பட்ட ஒரு விளையாட்டு வீரனுக்கு தான் அந்த பக்குவம் இருக்கும்.

கூடைப்பந்து விளையாட்டு கடினமா இல்லையா என்பது அவரவர்களின் ஆர்வத்தை பொறுத்தே அமையும். ஆனால் மற்ற விளையாட்டுகளை ஒப்புநோக்கும்போது அவ்வளவாக கடினமில்லை என்றே சொல்லலாம். உதாரணமாக கால்பந்து, ஹாக்கி போன்றவை கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் நான்கு மடங்கு பெரிதான மைதானம் முழுக்க ஓடி களைக்க வேண்டும். உடலில் காயம், சுளுக்கு, தசைப்பிடிப்பு சர்வசாதாரணம். கூடைப்பந்தில் அப்படிப்பட்டஆபத்து அதிகமில்லை.

இந்த விளையாட்டை பல கருத்தியல்களை கொண்டு பிரிக்கலாம். அவற்றில்: இயற்பியல், வடிவியல் மற்றும் உளவியல் மூன்றையும் உள்ளடக்கியது எனலாம். The simplest motion is the easiest. ஆடுகளத்தில் எதிரணி வீரர்களுக்கு டிமிக்கி கொடுத்து, பந்தை தட்டிக்கொண்டே வளையத்துக்குள் சொருகி, எதிராளியை அதிர்ச்சிக்குள்ளாக்குவது சுவாராஸ்யமான ஒன்று.

கூடைப்பந்து ஒரு விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அதனால் தான் கூடைப்பந்து அனைத்து வயதினரும் விரும்பும் ஒரு விளையாட்டாகவும், உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த விளையாட்டின் விதிகள் மிகவும் எளிமையானவை, ஆனால் இதில் தேர்ச்சி பெறுவது மிகவும் சவாலானது. மற்ற விளையாட்டுகளை போலவே
தொடர் பயிற்சியும் முயற்சியும் அந்த சவாலை உடைக்கும்.

பல ஆண்டுகள் விளையாடி, பல ஆண்டுகளாக விளையாடாமல் இருந்து தற்போது விளையாடுவது சவாலாக தான் இருக்கிறது எனக்கு. அதோடு கூடவே பந்தோடு என்னையும் தூக்கிக்கொண்டுவிளையாடுவது அதைவிட சவாலாக தானிருக்கிறது.

# இங்கிலாந்திருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top