Close
நவம்பர் 21, 2024 9:00 மணி

கல்பனா சாவ்லா நினைவு நாளில் (பிப் 1) சில குறிப்புகள்..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

கல்பனா சாவ்லா நினைவு நாள்

 கல்பனா சாவ்லா நினைவு நாளில்(பிப் 1) சில குறிப்புகள்..

சோவியத் விண்கலத்தில் பயணித்த முதல் இந்திய வீரர் ராகேஷ் சர்மா. (விண்வெளிக்கு பயணித்த வீரர்களில் 108 வது விண்வெளி வீரர் ) அடுத்ததாக விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்திய பெண் கல்பனா சாவ்லா.

அமெரிக்க கென்னடி விமான நிலையத்திலிருந்து கொலம் பியா விண்கலம் ( STC-107) தனது 16 -ஆம் நாள் ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பும்போது அமெரிக்காவின் டெக்சாஸ் வான்பரப்பில் தரை இறங்குவதற்கு முன்பு பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது விண்கலம் வெடித்து சிதறி ஆறு பேருடன் தனது 41 -வது வயதில் இறந்தார்.

2003-ம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி விண்வெளி ஆராய்ச்சிக் காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்தி லிருந்து கொலம்பியா விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். ஆனால் பூமி சுற்றுப் பாதைக்கு வந்த போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்து சிதறி கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்களும் பலியாகினர்.

கொலம்பியா விண்கல விபத்துக்கு அது பூமியிலிருந்து கிளம்பியபோது, சிதறி விழுந்த ஒரு நுரை துண்டு தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விண்கலம் புறப்படும்போதே இந்த நுரை துண்டு அதன் மீது விழுந்து, அந்த விண்கலத்தின் வெப்பத்தைத் தாங்கும் பாதுகாப்பு கவசத்தில் துளையை ஏற்படுத்திவிட்டது.

STS 107 விண்வெளி திட்டத்தின் தொடக்கத்தில் கொலம்பியா விண்கலம் பூமியில் இருந்து புறப்படும் பொழுதே விண்கலத் தின் வெளிப்புற தொட்டியில் இருந்து நுரை வெளியேற்றம், விண்கலத்தின் இடது இறக்கையை பாதித்து இருந்தது.

கல்பனா சாவ்லா பல்வேறு ஆய்வுகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு சரிசெய்யப்படாத அதே விண்கலத்தில் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஏற்கெனவே ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தரையிறங்க 16 நிமிடம் முன்னதாக வளிமண்டலத்தின் சூடான காற்று விண்கலத்துக்குள் புகுந்து விண்வெளி ஓடத்தின் உட்புற இறக்கை அமைப்பை பாதிப்படையச் செய்தது. இதுவே விபத்துக்கு காரணமாக அறியப்படுகிறது.

இதனால் இந்த விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது, ஏற்படும் மிக உயர் அழுத்த வெப்ப நிலையால் வெடித்துச் சிதறிவிடும் என்பது அப்போதே நாஸா விஞ்ஞானிகளுக்கு தெரிந்து விட்டது.

இது குறித்து நாசா விஞ்ஞானிகளில் ஒருவரான வெய்ன் ஹேயில் இணையதள பக்கத்தில் நிறைய விவரித்திருக் கிறார்.  அதில், கொலம்பியா விண்கலம் பழுதடைந்திருப்பது பற்றி நாங்கள் முன்னரே விவாதித்தோம். ஆனால் அதன் தெர்மல் பாதுகாப்பு பகுதியில் இருக்கும் பழுதை சீராக்க முடியாது என்று இயக்குநர் ஹான் ஹர்போல்ட் என்னிடம் கூறிவிட்டார்.

இந்தத் தகவல் விண்கலத்தில் பயணம் செய்த விண்வெளி வீரர்களுக்கு தெரிவிக்ககக் கூடாது என முடிவு செய்யப்பட்டது என ஒரு அதிர்ச்சி தகவலை பதிவு செய்திருக்கிறார்.

அதாவது கொலம்பியா விண்கலத்தில் பிரச்னை ஏற்பட்டிருப்பதால் நிச்சயம் அது வெடித்து சிதறிவிடும் என்பது நாசாவுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. ஆனால் அதை விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்களிடம் தெரிவிக்கா மல் மறைத்திருக்கின்றனர். இதனால் அந்த விண்கலத்தில் பயணித்த 7 பேரும் பூமிக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் விண்கலம் வெடித்து சிதறி பலியாயினர்.

விண்வெளி வீராங்கனையின் மறைவிற்குப்பின் அவர் பெயரில் அளிக்கப்பட்ட விருதுகள், பதக்கங்கள் பல. விண்வெளி வீராங்கனையாக மலர்ந்து அந்த விண்ணிலேயே விண்மீனான கல்பனா சாவ்லாவின் சாதனைகள் நம் அனைவர் நினைவிலும் நிற்கிறது.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top