தோழர் நல்லகண்ணு பிறந்த நாளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினமும் ஒரே நாளில், இன்று 26.12.1925 அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க சரித்திர சிறப்பாகும்.
10 வயதிலே போராட களத்திற்கு வந்தவர், சுதந்திரத்திற்காக அடிவாங்கி, சிறை எல்லாம் சென்று முகத்தில் வாங்கிய தழும்பு இன்றும் உண்டு. சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்டாக அவர் போராடினார், திருவைகுண்டத்தில் பதுக்கி வைக்கபட்ட நெல்மூட்டைகளை கண்டுபிடித்து அரசுக்கு கொடுத்ததில் இருந்து அவரின் போராட்டம் தொடர்ந்தது. எங்கெல்லாம் மக்கள் பாதிக்கபட்டார்களோ அங்கெல்லாம் போராடினார்.
விடுதலை இயக்கம் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். சாதி ஒழிப்பு போராளி. சிறு வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, பல போராட்டங்களில் ஈடுபட்டார்.1949 டிசம்பர் 20 ல் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருடைய மீசையை ஒவ்வொன்றாகப் பிடுங்கியும் தீயினால் பொசுக்கியும் சித்திரவதை செய்யப்பட்டார்.
தனது 80 வது பிறந்தநாளுக்கு பரிசாகக் கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மற்றும் ஒரு கார் இரண்டையும் கட்சிக்கே கொடுத்துவிட்டார். தனக்கு வரும் பரிசுகளையும் நன்கொடைகளையும்.., கட்சிக்கும் நல்ல விஷயங்களுக்குமோ கொடுத்து கொண்டிருப்பவர்
தனது துணிகளை இன்று வரை தானே துவைத்துக் கொள்கிறார். எப்போதும் தனது மடியில் கடலை மிட்டாய்கள் வைத்திருப்பார். யாராவது பார்க்க வந்தால் அவரது அன்பான உபசரிப்பு கடலைமிட்டாயுடன் ஆரம்பிக்கும்.
நவீன கக்கன் என்ற புகழுக்குரியவர். ஜோதிபாசு போல, ஈகே நாயனார் போல பெரும் உச்சத்தை அடைந்திருக்க வேண்டியவர் நல்லகண்ணு.
தமிழகத்தில் பெரியாரும் அண்ணாவும் தோன்றி இருக்காவிட்டால், நான் சங்கரையாவுடனும், நல்லகண்ணுவுடனும் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருந்து இருப்பேன். இதை சொன்னவர் கலைஞர் கருணாநிதி.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋