அரிமழத்தில் தொடரும் திருட்டு வழிப்பறிக் கொள்ளையைக்
கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் திருட்டு, வழிப்பறிக் கொள்ளையைக் கண்டித்தும், காவல்துறையினர் கொள்ளையர்களை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரிமழம் எட்டாம் மண்டகப்படியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.வி.ராமையா தலைமை வகித்தார். ஆர்.வெள்ளைச்சாமி, ஆர்.கதிர்வேல், ஏ.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஜி.நாகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.அடைக்கப்பன் நன்றி கூறினார்.